ஒவ்வொரு காட்சியிலும் தேம்பி தேம்பி அழ வைத்த 5 வெற்றி படங்கள்.. பார்த்தா நீங்களே அழுதுருவீங்க!

தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதில் ஒரு சில படங்கள் மட்டும்தான் காலத்தையும் தாண்டி தற்போது வரை நிலைத்து நிற்கின்றன.

அதற்கு காரணம் படத்தின் கதையம்சமும் அப்படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பு திறமையும் தான். ஆனால் சமீப காலமாக எந்த ஒரு படமே பெரிய அளவில் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை. படம் வெளியான உடனே வசூலும் பெற்றுவிடும் படமும் வெற்றி அடைந்து விடும். ஆனால் காலத்தை வென்று விடாது.

ஆனால் எந்த ஒரு படம் வசூலையும், விமர்சனத்தையும் தாண்டி காலம் கடந்தும் பேசப்பட்டு வருகிறதோ அந்த படங்கள் தான் சினிமாவின் தூண்களாக கருதப்படுகின்றன. அப்படி சினிமாவில் காலம் கடந்தும் நிலைத்து நிற்கக்கூடிய படங்கள் உள்ளன. அப்படி இடம் பிடித்துள்ளது எந்தெந்த படங்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

பாசமலர்

pasamalar
pasamalar

1960 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாசமலர். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரி ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. அண்ணன் தங்கையின் பாசத்தில் உருவான இப்படம் காலம் கடந்தும் தற்போது வரை அண்ணன் தங்கைக்கு பாசத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பார்த்து அழுகாத ரசிகர்களே கிடையாது.

படத்தை பார்க்க கிளிக் செய்யவும்

மகாநதி

mahanadhi
mahanadhi

தமிழ் சினிமாவில் நடிப்பின் மூலம் பல ரசிகர்களை வைத்திருப்பவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் வெளியான மகாநதி திரைப்படத்தில் ஒரு மனிதனுக்கு குடும்பத்தில் ஏற்படும் கவலைகளை, எந்த அளவிற்கு அவனை பாதிக்கும் என்பதை வெளிப்படையாக படத்தில் காட்டி இருப்பார்கள். இப்படத்தில் பார்த்து அழுகாத ரசிகர்களே கிடையாது.

படத்தை பார்க்க கிளிக் செய்யவும்

அஞ்சலி

anjali

மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி திரைப்படம் காலம் கடந்தும் தற்போது வரை மணிரத்தினத்திற்கு அடையாளமாகவே உள்ளது. இப்படத்தில் குழந்தைக்கு ஏற்படும் கஷ்டங்களையும் அதனை எதிர்கொள்ளும் விதம் படத்தில் வித்தியாசமாக காட்டியதால் இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் வரும் ஒவ்வொரு சம்பவங்களும் ரசிகர்கள் கண் கலங்க வைக்கும் அந்த அளவிற்கு ரசிகர் இடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

படத்தை பார்க்க கிளிக் செய்யவும்

அன்பே சிவம்

anbe-sivam
anbe-sivam

கமல்ஹாசன் நடிப்பில் உருவான அன்பே சிவம் திரைப்படம் ஒரு மனிதன் சக மனிதர்களை மதிக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து உருவானது. இப்படம் ரசிகர்களிடம் இன்றுவரை பார்க்கப்பட்டு தமிழ்சினிமாவின் அடையாளமாகவே உள்ளது.

படத்தை பார்க்க கிளிக் செய்யவும்

7ஜி ரெயின்போ காலனி.

7G-rainbow
7G-rainbow

ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. ஆனால் இப்படத்தில் மகனுக்கும் அப்பாவிற்கும் நடக்கும் சண்டையை தத்ரூபமாக எடுத்திருப்பார் இயக்குனர் செல்வராகவன். என்னதான் மகனிடம் அப்பா சண்டை போட்டுக் கொண்டாலும் மகன் வெற்றி அடைவதை பார்த்து பூரித்துப் போவார் அதை பார்த்து மனம் வருந்துவார் ரவிகிருஷ்ணா. இப்படமும் தமிழ் சினிமாவில் முக்கிய படமாக உள்ளது.

படத்தை பார்க்க கிளிக் செய்யவும்

மேற்கண்ட அனைத்து படங்களுமே ரசிகர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி ஒரு கட்டத்திற்கு பிறகு தங்களை அறியாமல் அழுது விடுவார்கள் அந்த அளவிற்கு படத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.

Next Story

- Advertisement -