கன்னடத்தில் 2016-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் ‘யூ டர்ன்’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட ஹாரர் – த்ரில்லர் ஜானர் படம். கன்னடத்தில் விக்ரம் வேதா படப்புகழ் ‘ஷ்ரத்தா ஸ்ரீநாத்’ ஹீரோயினாக நடித்திருப்பார். லூசியா ( தமிழில் சித்தார்த் நடித்த ‘எனக்குள் ஒருவன்’) படப்புகழ் பவன் குமார் இயக்கிய படம் இது. அங்கு பல தியட்டேர்களில் 100 நாட்களை கடந்து ஓடிய படம்.

samantha u turn

பெங்களூரில் உள்ள பாலம் ஒன்றில் சிறிது தூரம் சென்று வளையாமல், பாதையை விளக்கி u turn எடுப்பதால் ஏற்படும் விபரீத ஆக்சிடெண்ட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது.

அதிகம் படித்தவை:  இயக்குனர் பாலு மகேந்திராவின் வாழ்க்கை வரலாறு

இப்படத்தின் ரீ -மேக் சமந்தா தன் திருமணத்துக்கு முன்பே நடிக்க வேண்டியது. எனினும் படம் துவங்கப்படவில்லை. இந்நிலையில் இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் வெர்ஷன் ஒரே நேரத்தில் ரெடியாகிறது.

Samantha-in-uturn-remake

ஆதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ராகுல் ரவீந்திரன் சமந்தாவுடன் இணைந்து முக்கிய ரோலில் நடிக்கிறார்.

#Aathi

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

தற்பொழுது இப்படத்தின் ஷூட்டிங் துவங்கியுள்ளதாக சமந்தா தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

வெகு விரைவில் படத்தில் நடிக்கவுள்ள இதர நடிகர்கள் மற்றும் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் வெளியிடப்படும்.

அதிகம் படித்தவை:  சர்வம் தாளமயம் இசை வெளியீட்டுக்கு வாழ்த்து சொல்லி வீடியோ வெளியிட்ட மின்சாரக்கனவு டீம்.

சினிமாபேட்டை கொசுறு நியூஸ்

சில நாட்களுக்கு முன்பே இப்படத்தை சைத்தான், சத்யா படப்புகழ் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குவார் என்ற செய்தி பரவியது. பின்னர் அது வதந்தியானது.

PK

தற்பொழுது ஒரிஜினல் வெர்ஷனை இயக்கிய பவன் குமாரே இதனை இயக்கவுள்ளாராம்.