தமிழில் வெற்றி பெற்ற 9 பிளேபாய் படங்கள்.. சிம்புவுக்கே டஃப் கொடுத்த மைக் மோகன்

தமிழ் சினிமாவில் சில படங்களின் மூலம் ஹீரோக்கள் அதிக பெண் ரசிகர்களைப் கவர்ந்து உள்ளார்கள். அவ்வாறு பல பெண்களை காதலில் விழச் செய்யும் கதாபாத்திரங்களில் நடித்து வெற்றி பெற்ற திரைப்படங்களைப் பார்க்கலாம்.

சிகப்பு ரோஜாக்கள்: மண் மணம் மாறாத திரைப்படங்களை இயக்கிக் கொண்டிருந்த இயக்குனர் பாரதிராஜா முற்றிலும் மாறுபட்டு இயக்கிய திரைப்படம் சிகப்பு ரோஜாக்கள். இத்திரைப்படத்தில் கமலஹாசன், ஸ்ரீதேவி ஆகியோர் நடித்திருந்தனர். பல பெண்களை காதலித்து, அவர்களை கொலை செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கமல். இத்திரைப்படம் 175 நாட்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.

நெற்றிக்கண்: எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் தந்தை, மகனாக நடித்த திரைப்படம் நெற்றிக்கண். இத்திரைப்படத்தில் லட்சுமி, சரிதா ஆகியோர் நடித்துள்ளனர். சக்ரவர்த்திக்கு பெண்கள் மீது காமபித்தன். அவரது மகன் சத்தியசீலன் ஏகப்பத்தினி விரதனாக உள்ளார். தந்தையை திருத்த நினைக்கும் மகனின் கதைதான் நெற்றிக்கண்.

நூறாவது நாள்: இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் விஜயகாந்த், மோகன், நளினி நடித்த காதல் மற்றும் திரில்லர் திரைப்படம் நூறாவது நாள். இப்படத்தில் மோகன் ஒன்பது பெண்களை காதலித்து கொலை செய்து, வீட்டின் சுவரில் புதைத்து வைக்கிறார். நூறாவது நாள் படம் 12 நாட்களிலேயே எடுத்து முடிக்கப்பட்டது.

சின்ன வீடு: இயக்குனர் பாக்யராஜ் கதை, திரைக்கதை, வசனம், எழுதி, இயக்கி கதாநாயகனாக நடித்திருப்பார். இவருக்கு ஜோடியாக கல்பனா நடித்திருந்தார். அழகான மனைவியை எதிர்பார்க்கும் பாக்யராஜுக்கு அதற்கு எதிராக அமைந்துவிடும். இதனால் வேறு ஒரு பெண்ணிடம் சிக்கி கொண்ட பாக்யராஜை அவரது மனைவி எப்படி மீட்கிறார் என்பதே சின்ன வீடு கதை.

இரட்டைவால் குருவி: பாலுமகேந்திரா இயக்கத்தில் 1987இல் மோகன், ராதிகா, அர்ச்சனா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் இரட்டைவால் குருவி. இப்படத்தில் மோகன் அத்தை மகளான அர்ச்சனாவை திருமணம் செய்து கொள்கிறார். அப்போது, பிரபல பாடகி ராதாவை சந்திக்க அவருடனும் பழகி வருகிறார். மோகன் இரு மனைவிகளையும் ஒரே சமயத்தில் சமாளிக்கத் தெரியாமல் பல இன்னல்களுக்கு உள்ளாகும் படம் இரட்டைவால் குருவி.

மன்மதன்: ஏ ஜே முருகன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு சிலம்பரசன், ஜோதிகா, கவுண்டமணி, சந்தானம், சிந்து துலானி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மன்மதன். இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். சிவப்பு ரோஜாக்கள் படத்தை கொஞ்சம் மாற்றி அப்போ உள்ள ட்ரெண்டில் எடுக்கப்பட்டது மன்மதன். ஆண்களை ஏமாற்றும் பெண்களை கொலை செய்யும் சைக்கோ த்ரில்லர் படம்.

தீராத விளையாட்டுப் பிள்ளை: விஷால் கதாநாயகனாக நடித்த தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தை கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருந்தார். இப்படத்தில் நீது சந்திரா, தனுஸ்ரீ தாத்தா, சாரா ஆகியோர் கதாநாயகியாக நடித்திருந்தனர். இப்படத்தில் விஷால் திருமணம் செய்து கொள்வதற்காக மூன்று பெண்களை தேர்ந்தெடுத்த அவர்களை காதலித்த அதில் ஒருவரை தேர்வு செய்கிறார்.

நான் அவன் இல்லை: இயக்குனர் செல்வா இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த நான் அவன் இல்லை. இப்படத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக சினேகா, நமீதா, மாளவிகா, ஜோதிர்மயி, கீர்த்தி சாவ்லா ஆகியோர் நடித்திருந்தனர். ஜெமினி கணேசன் நடித்த நான் அவனில்லை திரைப்படத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜீவா பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு அவர்களிடம் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு தப்பித்து செல்கிறார். பின்பு நான் அவன் இல்லை என்று சாதிக்கிறார்.

ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்: அதர்வா, ரெஜினா கெஸன்ட்ரா, பிரணிதா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆனந்தி, சூரி மற்றும் பலர் நடித்த படம் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும். இப்படத்தில் ஹீரோ தனது திருமண பத்திரிக்கை வைப்பதற்காக முன்னாள் காதலிகள்
ரெஜினா, ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரணிதா சந்திக்கிறார். கடைசியில் அதர்வாவுக்கு யாருடன் திருமணம் நடக்கிறது என்பது ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் கதை.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்