தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர்கள் விஜய், அஜித். இவர்கள் எப்போது ஒருவருக்கொருவர் சமூக வலைத்தளங்களில் சண்டைப்போட்டு கொண்டே இருப்பார்கள்.

ஆனால், காவேரி பிரச்சனையில் இருவரும் இணைந்து கன்னட நடிகர்களை கிண்டல் செய்தனர், இங்கிருந்து பார்க்க ஆனந்த கண்ணீரே பலருக்கும் வந்தது.

இதனால் பாதிக்கப்பட்டது என்னவோ ஒரு அப்பாவி தமிழ் இளைஞர் தான், ஆம், நடிகர்களை கிண்டல் செய்ததை தன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த ஒரே காரணத்திற்காக ஒரு மாணவனை 10 பேர் சேர்த்து அடித்து அதை தைரியமாக சமூக வலைத்தளங்களிலும் அப்லோட் செய்துள்ளனர்.