fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பிரபல சின்னத்திரை பிரபலங்களின் தற்கொலைகள்.. நம்பமுடியாத கொடுமையான காரணங்கள்

serial-actors

Entertainment | பொழுதுபோக்கு

பிரபல சின்னத்திரை பிரபலங்களின் தற்கொலைகள்.. நம்பமுடியாத கொடுமையான காரணங்கள்

சினிமாவில் ஹீரோ ஹீரோயின்களாக இருப்பவர்களை தவிர மற்றவர்கள் அனைவருக்குமே அவர்களின் பாடு திண்டாட்டம்தான். தின சம்பளத்தில் நிறைய வேலை பார்த்து தடுமாறிக் கொண்டிருக்கும் நடிகர்கள் பலர் தங்களது பிரஷர் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

பெயர் புகழ் அதிகமுள்ள நடிகர்கள் மத்தியில் எப்படியாவது தட்டுத்தடுமாறி முன்னேறி விட வேண்டுமென சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் சீரியலில் பத்தோடு பதினொன்றாக நின்று நடித்து சாதிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டவர்கள் பலர் உள்ளனர்.

வைஷ்ணவி: வைஷ்ணவி சின்னத்திரை நாயகியாக வலம் வந்தவர். வைஷ்ணவியின் தற்கொலைக்கு சக நடிகரான தேவ் ஆனந்துதான் காரணம் என வைஷ்ணவியின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். தேவ் ஆனந்த 2 வதாக திருமணம் செய்துகொள்ள விரும்பினார். ஆனால், வைஷ்ணவி நிராகரித்துவிட்டார்.

இதனால், ஆத்திரம் அடைந்த தேவ் ஆனந்த் வைஷ்ணவியை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். அவரது, துன்புறுத்தல் காரணமாகவே வைஷ்ணவி தற்கொலை செய்துகொண்டார் என கூறினார்கள். இவர் தற்கொலையில் பல சந்தேகங்கள் கிளம்பிய நிலையில் அவை அனைத்துமே வந்த சுவடு தெரியாமல் மூடப்பட்டது.

 

tamil-serial-actress-vaishnavi-suicide

tamil-serial-actress-vaishnavi-suicide

சாய் பிரசாத்: சின்னத்திரையில் பிரபல நடிகராக வலம் வந்து சாய் பிரசாத் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் கிடைத்தது. ஆனால் அதில் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.

tamil-serial-actor-saiprasad-suicide

tamil-serial-actor-saiprasad-suicide

நடிகை சோபனா: சோபனா இறக்கும்பொழுது ஒரு டைரியை போலீஸார் கண்டுபிடித்துள்ளதாக தெரிகிறது. அதில் ஷோபனா என்ன எழுதி வைத்திருக்கிறார்வந்தனர். அதில் ஷோபனாவின் தாயார் சமீப காலமாக உடல்நலம் குன்றியிருந்தார். அம்மாவும் போய்விட்டால் தனது எதிர்காலம் பற்றிய கவலையில் தற்கொலை முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் உண்மை அவருக்கு மட்டும்தான் தெரியும். நல்ல காமெடி நடிகை.

tamil-serial-actress-shobana-suicide

tamil-serial-actress-shobana-suicide

நடிகை சபர்ணா: சன் டிவி, விஜய் டிவி, ஜி தொலைக்காட்சி சீரியல்களில் வில்லியாக நடித்து பிரபலமானவர். காதலில் தோல்வியுற்ற நடிகை சபர்ணாவுக்கு அவரது பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. மர்மமான முறையில் அவரது இல்லத்தில் பிணமாக கிடந்தது சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

tamil-serial-actress-sabarna-suicide

tamil-serial-actress-sabarna-suicide

முரளி மோகன்: சினிமா மற்றும் சீரியலில் அப்பாவி வேடத்தில் நடித்துள்ள முரளிமோகன் என்பவரும் தற்கொலை செய்து கொண்டார். முரளிமோகன் தோன்றிய ஹார்லிக்ஸ் விளம்பரம் ரொம்ப பிரபலமானதால், அவரை ஹார்லிக்ஸ் மாமா என்றும் குறிப்பிடுவதுண்டு. அவருக்கும் கடன் பிரச்சனை இருந்ததாக கூறுகிறார்கள்.

tamil-serial-actor-murali-mohan-suicide

tamil-serial-actor-murali-mohan-suicide

 

பிரியங்கா: குடும்பத் தகராறு காரணமாக நடிகை பிரியங்கா தற்கொலை செய்து கொண்டாரா என்று தெரியவில்லை. பிரியங்காவுக்கும் கூடைப்பந்து பயிற்சியாளர் அருண்பாலாவுக்கும் திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை. மேலும் கருத்து வேறுபாடு காரணமாக 2 மாதமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதன்பின் தான் பிரியங்கா மரணமடைந்துள்ளார்.

tamil-serial-actress-priyanka-suicide

tamil-serial-actress-priyanka-suicide

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top