Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தமிழ் சென்சேஷனல் ஹீரோயின்.. இப்படி வருவேன்னு எதிர் பாக்கலல்ல!
தமிழ் சினிமாவில் பிரபலமாக பலரும் பலவிதமான விஷயங்களை கையில் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
அதேபோல் தமிழ் ரசிகர்களிடையே சுலபமாக அதே சமயத்தில் பெரிய அளவில் பிரபலமாக ஒரு வாய்ப்பு இருக்கிறது என்றால் அது விஜய் டிவி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
இந்த நிகழ்ச்சியை பார்க்காத தமிழ்நாடே கிடையாது. தன்னுடைய கேரக்டரை பிரதிபலித்து ரசிகர்களை கவர்ந்து பல நடிகர் நடிகைகள் தற்போது ஏகப்பட்ட ரசிகர் பட்டாளங்களை வைத்துள்ளனர். அதில் ஓவியா, கவின் போன்றவர்களை பிரபலமாக சொல்லலாம்.
அந்த வகையில் சமீபகாலமாக இளம் ரசிகர்களிடையே பிரபல நடிகையாக வலம்வரும் அதுல்யா அடுத்த சீசனில் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.

athulya-cinemapettai
என்னதான் அதுல்யா ரசிகர் பட்டாளங்களை கொண்டிருந்தாலும் தொடர்ந்து அவருக்கு படங்களில் இரண்டாவது ஹீரோயின் போன்ற வேடமே கொடுக்கப்பட்டுவருகிறது. இல்லையென்றால் சாதாரண ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதனால் தனக்கான ரசிகர் பட்டாளத்தை பயன்படுத்தி பெரிய அளவு சினிமாவில் பிரபலமாக முடிவெடுத்து விட்டாராம் அதுல்யா. அதற்காக பிக் பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியை டார்கெட் செய்துள்ளாராம். கண்டிப்பாக அடுத்த சீசனில் அதுல்யாவுக்கு ரசிகர்கள் கோயிலே கட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
