Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய தமிழ் ராக்கர்ஸ்.! அப்படி என்னாடா கோவம் விஜய் மீது.!
தமிழ் ராக்கர்ஸ் களின் அட்டகாசம் வரவர எல்லை மீறிக் கொண்டே போய்க் கொண்டிருக்கிறது, ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் தற்போது வெளியாகிய சர்க்கார் படத்தின் பாடலையும் கடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நேற்று சர்க்கார் படத்தின் ட்ராக் லிஸ்ட் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் வெளியிட்டது.

sarkar al
அதேபோல் தமிழ் ராக்கர்ஸ் அதே வேகத்தில் சர்க்கார் படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் வெளியிட்டது , தமிழ் ராக்கர்ஸ் முன்பெல்லாம் படங்களை மட்டும் வெளியிட்டு தயாரிப்பாளர்களில் வயிற்றில் அடிப்பார்கள், ஆனால் தற்பொழுது பாடலையும் வெளியிட்டு படக்குழுவிற்கு தொல்லை கொடுத்து வருகிறார்கள்.
இன்று மாலை சர்க்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது ஆனால் நேற்று தமிழ் ராக்கர்ஸ் இந்த பாடல்கள் வெளியீட்டு விட்டதால் பலர் அதை டவுன்லோட் செய்து விட்டார்கள், பாடலை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முடக்கப்பட்டது.
ஆனால் தமிழ் ராக்கர்ஸ் சும்மா விடுவார்களா என்ன அவர் முடக்கி அவர்கள் முக்கிய சில மணி நேரங்களிலேயே மெட்ராஸ் ராக்கர்ஸ் எல் சர்க்கார் படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியிட்டார்கள்,ஏற்கனவே சர்க்கார் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் ஒரு பாட்டு கூட பாட வாய்ப்பு தராத சோகத்தில் சோர்ந்து இருக்கும் விஜய் ரசிகர்களின் வெந்த புண்ணில் இப்படி வேல் பாய்ச்சலாமா தமிழ்ராக்கன்ஸ்?
