Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தமிழ் ராக்கர்ஸை வச்சு செஞ்ச அமேசான்! சிறப்பான சம்பவத்தால் ஸ்தம்பித்த தமிழ் ராக்கர்ஸ் டீம்

ஊரடங்கு காலத்தில் திரையரங்குகள் கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கும் மேலாக மூடியிருக்கிறது. இனிமேல் Lock Down தளர்த்தபட்டாலும் திரையரங்குகளுக்கு மக்கள் வர அதிக வாய்ப்பு இல்லாததால் பல படங்கள் OTT தளத்தில் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் OTT தளங்களுக்கு சவாலாக இருந்த தமிழ் ராக்கர்ஸ்சை அமேசான் பிரைம் நிறுவனம் நார் நாராய்  பிச்சு போட்டுள்ளது. ஆனால் மறைமுகமாக செய்துள்ளனர்.

10 ஆண்டுகளுக்கு மேலாக உலகத்தில் உள்ள அனைத்து சினிமாக்காரர்களுக்கும் தண்ணி காட்டி வந்த  இணையதளம் தான் தமிழ் ராக்கர்ஸ். எந்த படம் வெளியே வந்தாலும் ஒரு மணிநேரத்திற்குள் எச்டி பிரிண்ட் டவுன்லோட் செய்து இணையத்தில் பறக்கவிட்டு கொடிகட்டிப் பறந்தனர் தமிழ் ராக்கர்ஸ்.

மேலும் தமிழ் ராக்கர்ஸ்சை எத்தனை தடவை முடக்க முயற்சி செய்தாலும் அடங்காமல் வேறொரு டிஎல்டி உடன் கெத்தாக வந்து அனைவருக்கும் சவாலாக நின்றனர். இவ்வாறிருக்க அமேசான் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படும் வகையில் OTT-யில் வெளியாகும் படங்களை பதிவேற்றம் செய்து OTT தளங்களையே மிரளவைத்தனர் தமிழ் ராக்கர்ஸ் குழுவினர்.

இதனால் கடுப்பான அமேசான் நிறுவனம் தமிழ் ராக்கர்ஸ்சை ஒழித்து கட்டுவதற்காகவே தனியாக ஒரு தொழில்நுட்ப குழுவை அமைத்தனர். தற்போது மூன்று மாத கால தீவிர முயற்சிக்குப் பின்னர் தமிழ் ராக்கர்ஸ் போன்ற தளங்களை சுக்குநூறாக நொறுக்கி போட்டிருக்கின்றனர்  அமேசான் நிறுவனம்.

மேலும் இந்த தகவலை அறிந்த தமிழ் ராக்கர்ஸ் ரசிகர்கள் அப்படியே உறைந்து போய் உள்ளனர். மேலும் தற்போது தமிழ் ராக்கர்ஸ் நிரந்தரமாக மூடப்பட்டாலும் மீண்டும் இவர்கள் பீனிக்ஸ் பறவை போல் இந்த வேலையை தொடர்வார்களா  இல்லை கை விடுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Continue Reading
To Top