fbpx
Connect with us

தமிழிலிருந்து ரீமேக் செய்யப்பட்டு படுதோல்வியடைந்த படங்கள்

News | செய்திகள்

தமிழிலிருந்து ரீமேக் செய்யப்பட்டு படுதோல்வியடைந்த படங்கள்

பொதுவாக ஹிந்தி, மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலிருந்து தமிழில் ரீமேக் செய்யப்படும் படங்கள் இங்கு அதிகளவில் வெற்றியடைந்துள்ளன. ஆனால் இங்கிருந்து மற்ற மொழிகளில் ரீமேக்காகும் படங்கள் எண்ணிக்கை ரீதியாக குறைவாகவே வெற்றியடைகின்றன. இதற்கு காரணம் ரசிகர்களின் வெவ்வேறு ரசிப்புத்தன்மை மற்றும் அவர்கள் வாழும் சூழல்.

அவ்வாறு தமிழில் இருந்து ரீமேக் செய்யப்பட்டு படுதோல்வியடைந்த சில ஹிந்தி படங்களை பார்ப்போம் வாங்க.

Ekk Deewana Tha (2012)

Ekk Deewana Tha

தமிழில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் ரகுமான் இசையில் கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் வெளிவந்து பெருவெற்றி பெற்ற படம் விண்ணைத்தாண்டி வருவாயா. ஆனால் இதே கூட்டணி இணைந்து எமி ஜாக்சன் மற்றும் ப்ரடேய்க் பாபர் நடிப்பில் ஹிந்தியில் இப்படத்தை ரீமேக் செய்தது. ஆனால் சரியான வரவேற்பின்றி படம் படுதோல்வியடைந்தது.

Khushi

Khushi

தமிழில் விஜய்க்கு பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய திரைப்படம் குஷி. இந்த படத்தினை தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அதே பெயரில் ரீமேக் செய்து S.J.சூர்யா இயக்கினார். தெலுங்கில் வெற்றி பெற்றாலும் ஹிந்தியில் தோல்வியடைந்தது இந்த படம். இத்தனைக்கும் இந்த படத்தில் பர்தீன்கான் மற்றும் கரீனா கபூர் நடித்திருந்தனர்.

Run

Run

லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளிவந்த வெற்றிப்படம் ரன். ஹிந்தியில் அதே பெயரில் ஜீவா இயக்கத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் பூமிகா நடிப்பில் இப்படம் வெளியாகி பெரு நஷ்டத்தை சந்தித்தது.

Force

Force

கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்து வெற்றியடைந்த படம் காக்க காக்க. இதன் ஹிந்தி பதிப்பான force ஜான் ஆப்ரஹாம் ஜெனிலியா நடிப்பில் நிஷிகாந்த் இயக்கத்தில் வெளிவந்தது. வித்யுத் ஜாம்வாளிற்கு ஹிந்தியில் இதுவே முதல் படம். ஆனால் இப்படம் எதிர்பாராத விதமாக தோல்வியடைந்தது.

Policegiri

ஹரி இயக்கத்தில் விக்ரம் திரிஷா நடிப்பில் வெளிவந்த படம் சாமி. இதன் ஹிந்தி பதிப்பான Policegiri படத்தில் சஞ்சய் தத் ஹீரோவாகவும், பிரகாஷ் ராஜ் வில்லனாகவும் நடித்திருந்தனர் K.S.ரவி குமார் இந்த படத்தை இயக்கியிருந்தார். படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்து படுதோல்வியடைந்தது.

Mr. Bechara (1996)

Mr. Bechara

பாக்கியராஜ் இயக்கி நடித்து வெளிவந்த வெற்றிப்படம் வீட்ல விசேஷம்ங்க. பிரகதி, ஜனகராஜ், சுரேஷ் போன்றோர் இப்படத்தில் நடித்திருப்பர். இதன் ஹிந்தி ரீமேக்கான Mr. Bechara (1996) அனில் கபூர், ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்து தோல்வியை சந்தித்தது.

Dayavan

Dayavan

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து கமலுக்கு தேசிய விருது பெற்றுத்தந்த மெஹாஹிட் திரைப்படம் நாயகன். இதன் ஹிந்தி பதிப்பில் வினோத் கண்ணா மற்றும் மாதுரி தீட்சித் நடித்திருந்தனர். தமிழ் அளவிற்கு எதார்த்தமோ, வலுவான திரைக்கதையோ இல்லாத காரணத்தால் இப்படம் தோல்வியடைந்தது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top