வெறும் பத்து வருடத்தில் 100 படங்கள் நடித்த இரண்டு நடிகர்கள்.. ரெண்டு பேருமே தமிழில் டாப்ல இருந்தவங்க!

இப்போதெல்லாம் வருடத்திற்கு ஒரு படங்கள் நடிக்கும் முன்னணி நடிகர்கள் ஒரு காலத்தில் ஒவ்வொரு வருடத்திற்கு நான்கைந்து படங்கள் நடித்து ரிலீஸ் செய்தார்கள் என்பது தெரிந்த ஒன்றுதான்.

அப்போதெல்லாம் தயாரிப்பாளர்களுக்கு பொற்காலமாக இருந்தது. சொன்ன நேரத்திற்கு நடிகர்கள் வந்து நடித்துக் கொடுப்பது, குறித்த நேரத்தில் படத்தை எடுத்து ரிலீஸ் செய்வது, மேலும் வருடத்திற்கு நான்கைந்து படங்கள் தயாரிப்பது என செல்வச் செழிப்பாக இருந்தனர்.

ஆனால் தற்போதெல்லாம் நடிகர்களின் சம்பளமும் படங்களின் பட்ஜெட்டும் அதிகமானதால் வருடத்திற்கு ஒரு படம் தயாரிக்கவே தயாரிப்பாளர்கள் தயங்குகின்றனர். அதைவிட கொடுமை, பெரிய அளவு பெயர் வெளியில் தெரியாத நடிகர்கள் கூட பந்தா செய்வதுதான்.

ஆனால் இதே தமிழ் சினிமாவில் வெறும் பத்தே பத்து வருடங்களில் 100 படங்களில் நடித்து சாதனை புரிந்த நடிகர்களும் இருக்கின்றனர். அவர்களில் முதலில் இருப்பவர் நம்ம நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா அவர்கள் தான்.

sivaji-ganesan-cinemapettai
sivaji-ganesan-cinemapettai

1962-ஆம் ஆண்டு வெளியான பராசக்தி படத்திலிருந்து அவருடைய நூறாவது படமான நவராத்திரி படம் வரை சிவாஜி கணேசன் வெறும் 12 வருடங்களில் 100 படங்களில் நடித்தார். அவரைத் தொடர்ந்து 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1985 ஆம் ஆண்டு வெளியான ராகவேந்திரா படத்தின் மூலம் தன்னுடைய 100வது படத்தை தொட்டார்.

rajinikanth-cinemapettai
rajinikanth-cinemapettai

இவர்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், இதில் சிவாஜி கணேசன் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை ஹீரோவாக நடித்த 100 படங்களை தொட்டார். ஆனால் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் ஹீரோவாக நடித்தும் 100 படங்களை தொட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்