Connect with us

Cinemapettai

அடுத்த படம் பண்ணலாமா? என கேட்ட சீக்கிர நடிகர்.. கை காசாவது மிஞ்சுமா என திருப்பி கேட்கும் தயாரிப்பாளர்

siva

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அடுத்த படம் பண்ணலாமா? என கேட்ட சீக்கிர நடிகர்.. கை காசாவது மிஞ்சுமா என திருப்பி கேட்கும் தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவில் சீக்கிரம் முன்னுக்கு வந்த நடிகர் என்றால் அவரை தவிர வேறு யாரும் இருக்க முடியாது. அந்த அளவு திரைக்கு வந்த சில ஆண்டுகளிலேயே முன்னணி நடிகராக உயர்ந்து விட்டார். இவரைப் பார்த்து சிலருக்கு பொறாமை என மேடை போட்டு அழுதது அனைவரும் அறிந்ததே.

ஆனால் நடிகருக்கு காமெடி வரும் அளவுக்கு ஆக்சன் படங்கள் கை கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. எடுத்த எல்லா முயற்சியும் தோல்வி. இருந்தும் நான் தலை கீழாகத்தான் குதிப்பேன் என விரைவில் திரைக்கு வர இருக்கும் படத்தில் நடித்துள்ளார்.

ஏற்கனவே நடிகருக்கு வாய் கொஞ்சம் அதிகம். இதில் இவர் ஒருவர்தான் போராடி வெற்றி பெற்றதைப் போல ஒவ்வொரு மேடையிலும் அதிகமாக பேசுவது ஆபத்தில் தான் முடிய போகிறது என்கிறது கோடம்பாக்க கொசுறுகள்.

இந்நிலையில் இவரது படத்திற்கு காசை தண்ணீராக செலவழித்து வருகிறது அந்த மூன்றெழுத்து தயாரிப்பு நிறுவனம். ஆனால் மூத்த தயாரிப்பாளர்களோ இவரை நம்பி இவ்வளவு செலவு பண்ண வேண்டாம் என அட்வைஸ் செய்கிறது. தயாரிப்பாளரோ, நான் படத்தின் இயக்குனரை நம்பித்தானே இவ்வளவு செலவு செய்கிறேன் என மனதுக்குள் அழுதுகொண்டே கூறியுள்ளார்.

ஆனால் உண்மையில் தயாரிப்பாளர் தற்போது கதிகலங்கி உள்ளது அவரது கண்களில் தெரிகிறது என்கிறது கோலிவுட். இருந்தும் செலவு பண்ணியாச்சு பில்டப் பண்ணி தான ஆகணும் என தொடர்ந்து சப்பைக்கட்டு கட்டி வருகிறாராம்.

சரி, ஆடு ஒன்று சிக்கி இருக்கு என தன்னோட அடுத்த படத்தையும் அதே தயாரிப்பாளரிடம் தள்ளி விட முயற்சி செய்துள்ளார் நடிகர். ஆனால் தயாரிப்பாளரோ பாதியை நீங்க எடுத்துக்கோங்க என உஷாராகி நடிகரின் தலையில் நேக்காக கட்டி விட்டாராம்.

ஏற்கனவே சீக்கிர நடிகர் பல இடங்களில் பல நடிகர்களை தன் வாயால் பதம் பார்த்தவர். தற்போது அவரே அந்த நிலையில் இருக்கும் போது, கொஞ்சம் ஓவராத்தான் பேசிட்டமோ என நினைக்கிறாராம்.

இருந்தும் விஜயகாந்த் ஸ்டைலில், குருவி தலையில பனங்காயை வைக்கலாம் ஆனால் பாம் வைக்க கூடாது என கிண்டலடிக்கிறார்கள் நம் கோடம்பாக்க நண்பர்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top