Connect with us

Cinemapettai

ப்ளேபாய் நடிகருக்கு கிடுக்கிப்பிடி போட்ட இளம் நடிகை.. முன்ன மாதிரி இருக்க முடியலையாம்

playboy-gossip

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ப்ளேபாய் நடிகருக்கு கிடுக்கிப்பிடி போட்ட இளம் நடிகை.. முன்ன மாதிரி இருக்க முடியலையாம்

திருமணம் என்ற ஒன்று ஆகிவிட்டாலே எல்லோரும் அடிமை தான். என்னதான் பெரிய ஆளாக இருந்தாலும் கட்டிய மனைவிக்கு கமுக்கமாக இருக்க வேண்டியதுதான். அதேதான் ப்ளேபாய் நடிகர் விஷயத்திலும் நடந்துள்ளது.

திறமையான நடிகராக இருந்தாலும் கதை தேர்வில் சொதப்பி அவ்வப்போது இண்டஸ்ட்ரி விட்டு காணாமல் போய்விடுகிறார். கடந்த வருடத்தில் கஷ்டப்பட்டு ஒரு படத்தை ஹிட் கொடுத்துவிட்டார். அதன் விளைவாக தொடர்ந்து பல படங்களில் கமிட் செய்யப்பட்டு வருகிறார்.

ஆனால் தற்போது படப்பிடிப்பு தளங்களில் முன்ன மாதிரி சேட்டைகள் செய்ய முடியவில்லையாம். ஏற்கனவே தன்னை விட வயது குறைவான மிகவும் இளமையாக பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தான் பெரிய ஆள் என நினைத்துக்கொண்டு நாயகியை தன் கைக்குள் அடக்கி விடலாம் என படப்பிடிப்புக்கு செல்ல வேண்டாம் என்று உத்தரவு போட்டாராம்.

ஆனால் நாயகி, இந்த வேலை எல்லாம் என்னிடம் ஆகாது, வேண்டும் என்றால் விவாகரத்து செய்து கொள்ளலாம் என மிரட்டியுள்ளார். இதனால் செய்வதறியாமல் முழித்துக் கொண்டிருக்கும் நடிகருக்கு மேலும் ஒரு இடி தலையில் இறங்கி உள்ளனர்.

ப்ளேபாய் நடிகர் ஹீரோவாக நடித்தால், நான் தான் ஹீரோயினாக நடிப்பேன் என ஒற்றைக் காலில் பிடிவாதம் பிடிக்கிறாராம் நாயகி. ஏன் என்று விசாரித்தால் படப்பிடிப்பு தளங்களில் ப்ளேபாய் நடிகர் சக நடிகைகளை கட்டி அணைப்பது, விளையாட்டுக்கு முத்தம் கொடுப்பது போன்ற மன்மத விளையாட்டுகளை விளையாடி உள்ள செய்தி இளம் நாயகியின் காதுக்குச் சென்று விட்டதாம்.

இதனால் தற்போது எந்த நாயகியுடன் பேசக்கூடாது என போனில் உள்ள நம்பரை எல்லாம் டெலீட் செய்து விட்டாராம் நாயகி. மேலும் எந்த ஹீரோயினையும் பார்க்கக்கூடாது எனவும் கட்டளை இட்டுள்ளார். மீறினால் பெட்டி படுக்கையை கட்டிக்கொண்டு அம்மா வீட்டுக்கு(என்ன கொடுமை இதெல்லாம்) கிளம்பி விடுங்கள் எனவும் ப்ளேபாய் நடிகரை தவிக்க விட்டு விட்டாராம்.

தற்போது என்ன செய்வதென்றே தெரியாமல் முழுவதும் பொண்டாட்டிதாசனாக மாறிவிட்டார் அந்த ப்ளேபாய் நடிகர். நடிகர் அப்போ சேட்டை செய்த நாயகிகள், தற்போது வேண்டுமென்றே பிளேபாய் நடிகரை சீண்டுகிறார்களாம்.

என் சோத்துக்கு வேட்டு வைத்து விடுவார்களோ என அஞ்சி பார்ட்டிக்கு சென்றாலும் பழைய நடிகைகளிடம் பேசுவதில்லையாம். கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்டாரு, இப்போ அனுபவிக்கட்டும் என கோலிவுட் வட்டாரங்களில் கிண்டலடிக்கிறார்களாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top