Tamil Cinema News | சினிமா செய்திகள்
காணாமல் போன காமெடி நடிகர்கள்.. யோகி பாபு தமிழ் சினிமாவை காப்பாற்ற முடியுமா?
தமிழ் சினிமாவில் காமெடிக்கு என்றும் முக்கியத்துவம் உண்டு. ஒரு நல்ல கதையை விட காமெடியுடன் எடுக்கப்படும் படங்களுக்குத்தான் ரசிகர்கள் என்றும் ஆதரவளிப்பார்கள். ஆனால் இன்று அந்த காமெடிக்கு தமிழ் சினிமாவில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
கவுண்டமணி, செந்தில், வடிவேல், விவேக் எல்லோரும் சினிமாவில் பிஎஃப் வாங்கிவிட சந்தானம் ஹீரோவாக முன்னேற, சூரி சாப்பிட்ட புரோட்டாவால் ரசிகர்கள் ஜீரணிக்க முடியாமல் ஒதுக்கிவிட சதீஷ், கருணாகரன் செய்யும் காமெடிகள் ரசிகர்கள் முகம் சுளிக்க வைக்க யோகி பாபு மட்டும் நிலைத்து நிற்கிறார்.
அவரால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தாக்குப்பிடிக்க முடியுமா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். காலை ஒரு படத்தின் படப்பிடிப்பு மதியம் வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பும் இரவில் மற்றொரு படப்பிடிப்பும் இவரால் தமிழ் சினிமாவின் காமெடி நேரத்தை சமாளிக்க முடியவில்லை.
எத்தனையோ சமூக வலைத்தளங்களில் உள்ள காமெடி நடிகர்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியும் ஒரு பயனில்லை. தமிழ் சினிமாவில் காமெடிக்கு வந்த நேரம் ஏழரை சனி தான். இன்று எத்தனையோ காமெடி நடிகர்கள் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் புதுமுகங்களை எந்த இயக்குனர்களும் நம்பி அவர்களை படத்தில் ஒப்பந்தம் செய்வதில்லை.
ஓடும் குதிரை மேல்தான் பந்தயம் கட்டுவார்கள் தவிர புதிய குதிரை மேல் சவாரி செய்வது ஆபத்து என நினைக்கிறார்கள். எல்லா குதிரையும் ஆரம்பத்தில் புதிதாக வந்து தான் கலந்து கொள்கின்றன. அவற்றை பந்தயத்தில் ஜெயிக்க வைக்க நாம்தான் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு ஓடும் குதிரை மேல் பாரம் ஏற்றினால் அந்தக் குதிரை விழத்தான் செய்யும் அப்பொழுதுதான் ஓடாத குதிரையும் நடந்தே வெற்றிபெறும்.
