கனடா பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதிலும் வாழும் அனைத்து தமிழ் மக்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நன்னாளில் குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் ஒன்றுகூடி கொண்டாடும் இந்நேரத்தில், அவர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பாக அமைய கடவுள் உறுதுணையாக இருப்பார்.

கனடா நாடு உருவாகி 150 ஆண்டுகள் கடந்து விட்டது. இதற்கு தமிழர்களின் பங்கு மிகபெரியது. அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே தமிழர்களுக்கு எப்போதும் கனடா அரசு உறுதுணையாக இருக்கும். அனைவரும் தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாட கனடா நாட்டு மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.