Tamil Nadu | தமிழ் நாடு
மகா புயலால் சீரழிய போகும் தமிழகம்.. 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
கன்னியாகுமரி கடற்கரையில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த மண்டலமாக உருவாகியிருக்கிறது. இந்த மண்டலத்தினால் உருவாகும் புயலுக்கு மகா என பெயரிடப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் முதல்வாரத்தில் உருவாகும் இந்த புயல்காரணமாக கடலோர பகுதியில் வாழும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் முதல்வாரம் வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குறிப்பாக திருச்சி, விருதுநகர், குமரி, ராம்நாடு, நெல்லை, மதுரை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய இடங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளான தேனி, கோவை ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை இனிவரும் காலங்களில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
