தமிழ்சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களுக்கு மேல் ரிலீசாகி வருகிறது து இந்த படங்கள் அனைத்தும் வெற்றி அடைகின்றதா  என்று பார்த்தால் கிடையாது, நல்ல கதை இருக்கும்  படங்களுக்கு எப்போதும் தமிழ் சினிமாவில் தனி இடம் உண்டு.

நல்ல கதை இருந்தாலும் சில படங்கள் தோல்வியை தழுவுகின்றனர ஒரு சில படங்களில் கதையே இல்லை என்றாலும் வெற்றி அடைந்து விடுகிறது, அதேபோல் சினிமாவை  பொருத்தவரை ஒரு நடிகர் அடுத்தகட்டத்திற்கு செல்கிறார் என்பதை அவர் நடித்த படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வைத்துதான் தீர்மானிக்க முடியும்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினியை தாண்டி தமிழகத்தில் தற்போது விஜய் தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் ஏனென்றால் பல வருடங்களாக முன்னிலையில் இருந்த எந்திரன் வசூலை மெர்சல் முறியடித்தது அனைவருக்கும் தெரியும்.

இந்த நிலையில் இதுவரை விநியோகஸ்தர்களுக்கு அதிகம் ஷேர்  கொடுத்த திரைப்படங்களின் லிஸ்ட்டை பார்க்கலாம். பாகுபலி2- ரூ 78.5 கோடி,மெர்சல்- ரூ 70 கோடி, எந்திரன்- 61 கோடி, தெறி- ரூ 50 கோடி, வேதாளம்- ரூ 49 கோடி