தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழலில் அரசியல் தலைமையை யார் ஏற்றால் சரியாக இருக்கும் என நடத்தப்பட்ட மெகா சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின்னர் தமிழக அரசியலில் பல்வேறு கட்ட மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் தமிழக அரசியலுக்கு தற்போது யார் தலைமை உடனடியாக தேவை என்ற கருத்து கணிப்பு மக்களிடம் நடத்தபட்டது.

இதில் அதிகபடியாக திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலினுக்கு 23.94 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் இடத்தில் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என பெயரெடுத்த சகாயத்துக்கு 22.23 சதவீதம் பேரும், அதற்கடுத்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 14.9 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சீமானுக்கு அடுத்த இடத்தில் அன்புமணி ராமதாஸ்க்கு 6.36 சதவீதம் பேரும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு 5.55 சதவீதம் பேரும் ஆதரவளித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்துக்கு வெறும் 4.62 சதவீத ஆதரவே உள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் வைகோ, திருமாவளவன், டிடிவி தினகரன் ஆகியோர் உள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 0.33 என்ற குறைந்த சதவீத ஆதரவுடன் கடைசி இடத்தில் உள்ளதாகவும் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது