Connect with us

Cinemapettai

7 லட்சம் அரசு காலி பணியிடங்கள்.! தமிழர்களுக்கு கிடைக்குமா?

job

India | இந்தியா

7 லட்சம் அரசு காலி பணியிடங்கள்.! தமிழர்களுக்கு கிடைக்குமா?

இளைஞர்கள் பலரும் படித்து விட்டு தற்போது வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் வேலைக்கான ஏக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அந்த அளவிற்கு வேலை வாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் உள்ளனர்.

ஒரு நாளுக்கு வேலைவாய்ப்புக்காக இளைஞர்கள் பல நிறுவனங்களில் ஏறி இறங்கி வருகின்றனர். புதுடெல்லியில் நடைபெற்ற லோக்சபாவில் எதிர்க்கட்சியினர் பல கேள்விகளை முன் வைத்தனர். அப்போது சமீபகாலமாக பல இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இல்லாமல் பல பேர் உள்ளதாக குற்றம் சாட்டினர்.

அதற்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் நிதியாண்டில் நாடு முழுவதும் 38.03 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்தனர். ஆனால் 31.19 லட்சம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன.
தற்போது 7.6 லட்சத்திற்கும் மேலான அரசு பணியிடங்கள் உள்ளன என தெரிவித்தார்.

ஆனால் சமீபகாலமாக தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு மத்திய அரசு வழங்குவதில்லை என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த வேலை வாய்ப்பு தமிழர்களுக்கு கிடைக்குமா என பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top