பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டில்லியில் 39 வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் போராட்டத்திற்கு தமிகத்தில் அனைத்து கட்சிகள் மற்றம் அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், தி.மு.க.,உட்பட அனைத்து கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். அதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விசாயிகளுக்கு ஆதரவாக வரும் 25ம் தேதி லாரிகள் இயங்காது என லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதன்மூலம் வரும் 25ம் தேதி நடக்கவுள்ள பொதுவேலை நிறுத்தத்திற்கு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு ஆதரவாக நடக்கும் முழு அடைப்பு போராட்டத்துக்கு லாரி உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளது அனைவர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.