Tamil Nadu | தமிழ் நாடு
3-வது நாளாக நோய் பாதிப்பை மளமளவென குறைந்த தமிழக அரசு.. கொரோனா யுத்தத்தில் வென்று வரும் தமிழகம்
கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து தமிழகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பு, தற்போது தொடர்ந்து 3-வது நாளாக 4 ஆயிரத்தை விட குறைவான தினசரி கொரோனா பாதிப்பே பதிவாகி உள்ளது.
மேலும் கொரோனாவில் மீண்டவர்களின் விகிதம் 93% ஆகவும், ஒட்டுமொத்த இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 88.8% மட்டுமே உள்ளது.
எனவே தான் தமிழகம் மற்ற மாநிலங்களை விட கொரோனா மீட்டெடுக்கும் முயற்சியில் வெற்றி கண்டு இந்தியாவிற்கே முன்னோடியாக திகழ்கிறது.
இந்நிலையில், தற்போது வரை தமிழகத்தில் 6,46,555 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மேலும் இதுவரை 91 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆகையால்தான் தமிழகம் RT-PCR கொரோனா பரிசோதனை செய்வதிலும், முன்னிலை வகித்துவருகிறது.
மேலும் தற்போதைய சூழலில் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுபவர்களை விட பரிபூரண குணம் அடைவோரின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது.
அதுமட்டுமில்லாமல் கொரோனா பரவலை தடுப்பதற்காக மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் தமிழக முதல்வர் எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் அறிவுறுத்தி வருகிறது.
அதற்காக பல கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஏன் அண்மையில் கூட சென்னை T. நகரில் உள்ள குமரன் சில்க்ஸ் துணிக்கடையில், கொரோனா கட்டுப்பாடு விதிகளை கடை பிடிக்காததால், மாநகராட்சி அதிகாரிகள் கடையை இழுத்து மூடி சீல் வைத்தனர்.
இப்படி மக்களின் நலன் கருதி தமிழக அரசு கடுமையான நடவடிக்கையை எடுப்பதாலே, தினசரி கொரோனா பாதிப்பு தமிழகத்தின் 6 ஆயிரத்திற்கு மேலாக இருந்த நிலையை உடைத்தெறிந்து.
தற்போது தொடர்ந்து 3-வது நாளாக கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்திற்கு கீழ் மளமளவென குறைந்தது, கொரோனா யுத்தத்தில் வெற்றி கண்டுள்ளது தமிழகம்.

edapaadi
