Connect with us
Cinemapettai

Cinemapettai

மருத்துவத்துறையில் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக மாறிய தமிழகம்.. சாதனை புரிந்த எடப்பாடியார்!

Tamil Nadu | தமிழ் நாடு

மருத்துவத்துறையில் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக மாறிய தமிழகம்.. சாதனை புரிந்த எடப்பாடியார்!

தமிழகத்தில் அதிமுக கட்சியின் சார்பில் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் முதலமைச்சராக பணியாற்றி வருகிறார். இவர் பல்வேறு நலத் திட்டங்களால் தமிழகத்தை பற்றி தீட்டியுள்ளார்.

இதனால் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை காட்டிலும், தமிழகம்  உயர்ந்த அந்தஸ்தை பெற்றுள்ளது. ஏனென்றால், எடப்பாடியாரின் சிறப்பான ஆட்சியால் தற்போது வேளாண்மை, நீர் மேலாண்மை, புதிய முதலீடுகளை ஈர்ப்பது, வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது என பல  திட்டங்களால் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது.

இந்த நிலையில் எடப்பாடியார் தற்போது புதிதாக மருத்துவத்துறையில் மற்றுமொரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதாவது ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதை மனதில் கொண்டு தமிழக மக்களுக்கு இதனை உருவாக்கித் தர வேண்டும் என்ற எண்ணத்தோடு, அம்மா மினி கிளினிக்குகள் என்ற பெயரில் 2000 மினி கிளினிக்குகளை தமிழகம் முழுவதும் செயல்படுத்த முதல்வர் திட்டமிட்டுள்ளார்.

இதற்கான முதற்கட்டமாக இன்று 630 மினி கிளினிக்குகளை முதல்வர் தொடங்கி வைத்துள்ளதாக  கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தில் 1851 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருவதோடு, 8 கிலோ மீட்டருக்கு ஒரு மருத்துவமனை தற்போது செயல்பட்டு வருகிறது. தற்போது சுமார் 30 ஆயிரம் பேர் வசிக்கும் இடத்தில் ஒரு மருத்துவமனை செயல்படும் என்ற நோக்கில் மினி கிளினிக் திட்டம் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்குகள் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஏற்கனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அனைத்து தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில், சுகாதாரத் துறையில் மேலும் ஒரு மகுடத்தை முதலமைச்சர் எடப்பாடி இணைத்துள்ளது பலரை வியக்க வைத்துள்ளது.

மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றிய இந்த மினி கிளினிக்குகள் திட்டத்தை இந்திய மருத்துவ சங்கம் பாராட்டி உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, இவ்வாறு மருத்துவத்துறையில் எடப்பாடியார் புரிந்துள்ள இந்த புதிய சாதனையை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

edappadi-palaniswami-modi

edappadi-palaniswami-modi

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top