பொதுமக்களின் உயிருக்கு உலை வைக்கும் தமிழக அரசு. தற்காலிக ஓட்டுனர் ஓட்டிய பேருந்து விபத்துக்குள்ளானதால் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள், தமிழகம் முழுவதும் மே 15 (இன்று) முதல் காலவறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வி அடைந்தததால், நேற்றே பெரும்பாலான இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஒரு சில பேருந்துகளே இயக்கப்பட்டன.

இதனால், அண்ணா தொழிற்சங்கம் மற்றும் தற்காலிக ஓட்டுனர்கள் கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தை முறியடிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

அதன்படி தமிழகத்தின் பல்வேறு இடங்களில், தற்காலிக ஒட்டுநர்கள் பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.

சேலம் நான்கு ரோடு பகுதியில் முதியவர் சாலையை கடக்கும் போது அரசு பஸ் மோதி காலில் பலத்த காயம் ஏற்பட்டது..

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக மாற்று ஓட்டுனர் ராஜேஷ் என்பவர் ஓட்டி வந்ததன் விளைவு. முதியவரின் உயிரை பதம் பார்த்துள்ளது.