fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சுயமரியாதை சுடர், தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றிய மக்கள் திலகம் – தமிழக முதல்வரின் புகழாரம்!

mgr-edappadi

Tamil Nadu | தமிழ் நாடு

சுயமரியாதை சுடர், தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றிய மக்கள் திலகம் – தமிழக முதல்வரின் புகழாரம்!

வெண்தாடி வேந்தர், சுயமரியாதைச் சுடர், பெண்ணின் போர்முரசு, பகுத்தறிவு பகலவன், என்றெல்லாம் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் ஈ.வே.ரா. பெரியார். இன்று அவருடைய 47 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதே நாள் தான் எம்ஜிஆரின் 33வது நினைவு தினமும் நினைவுகூரப்படுகிறது

எனவே தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் இன்று பெரியாரின் நினைவு தினத்தில் அவரை நினைவு கூறும் வகையில் ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘சாதிய பாகுபாடுகளை அடியோடு தகர்த்து எறிந்தவர். சுயமரியாதையையும் பகுத்தறிவையும் மக்களுக்கு ஒருங்கே ஊட்டியவர். தான் கொண்ட கொள்கைகளை தீர்க்கமாக கடைபிடித்தவர்.

பொதுவாழ்க்கைக்கு இலக்கணமாய் வாழ்ந்த பகுத்தறிவு பகலவனை, அவர்தம் நினைவு நாளில் நினைவு கூறுகிறேன்’ என்று தனது பதிவில் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

periyar-cinemapettai

மேலும் புரட்சித்தலைவர் எம் ஜி ஆருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி யார் தனது ட்விட்டர் பதிவில் ‘சரித்திர திட்டங்கள் மூலம் தமிழகத்தின் தலையெழுத்தை சீரமைத்த நம் மக்களின் திலகர் இந்தியாவின் ஆகச் சிறந்த மக்கள் கழகத்தை நிறுவிய மாபெரும் புரட்சித் தலைவர்.

மக்களுக்கு ஈகை செய்வதற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் நம் பொன்மனச் செம்மலின் நினைவு தினத்தில் அவரை நினைவு கூறுகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். இதேபோல் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் எம்ஜிஆருக்கு தனது ட்விட்டர் பதிவில் மூலம் நினைவுகூர்ந்தார்.

MGR-cinemapettai

ஆகையால் சரித்திர நாயகர்களான பெரியார் மற்றும் எம்ஜிஆரின் நினைவு தினத்தில் பல அரசியல் பிரமுகர்களும், தமிழக மக்களும் அவர்களின் திரு உருவத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செய்து வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top