முக்கியத் திட்டங்களை நிறைவேற்ற டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர்!

தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் இன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்துப் பேச டெல்லி விரைந்துள்ளார்.

இவர் டெல்லி செல்வதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளது. முதலில் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தை தொடங்க வேண்டும் என்று பிரதமரிடம் நிதி உதவி கோர உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியையும் உறுதிப்படுத்தவும், மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் நினைவிட கட்டிடப் பணிகள் முடிவடைந்த நிலையில், அதற்கான திறப்பு விழாவிற்கு பிரதமரை அழைக்க தமிழக முதல்வர் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.

ஏனென்றால் 79.75 கோடி ரூபாய் மதிப்புள்ள பீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் நினைவு கட்டடம் தற்போது கட்டிட பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

 

ஆகையால் தமிழக முதல்வரும், அவருடன் தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து விட்டு, அதன்பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் சந்தித்து பேச உள்ளனர்.

எனவே இந்த பயணத்தின் முடிவில் தமிழகத்திற்கு நல்ல பல திட்டங்களை நிறைவேறும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.