Connect with us
Cinemapettai

Cinemapettai

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் அதிரடியான முடிவெடுத்த தமிழக முதல்வர்! தீவிர விவாதத்தில் ஆளுநர்!

Tamil Nadu | தமிழ் நாடு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் அதிரடியான முடிவெடுத்த தமிழக முதல்வர்! தீவிர விவாதத்தில் ஆளுநர்!

தமிழகத்தில் அதிமுக அரசின் சார்பில் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் முதல்வராக ஆட்சி செய்து வருகிறார்.

இந்நிலையில் கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விடுவிக்கும் முடிவை எடுப்பது குறித்து தனது அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது நேற்று செய்தியாளர்களிடம் முதல்வர், ‘அரசியலமைப்பு அதிகாரங்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு சம்பந்தப்பட்ட அவர்களை விடுவிப்பது குறித்து ஆளுநர் தான் முடிவு செய்ய வேண்டும்’ என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர் 2000 ஆம் ஆண்டில் எம் கருணாநிதி தலைமையிலான திமுக அமைச்சரவை ஒருமனதாக  நளினியின் குழந்தை நலனை கருத்தில் கொண்டு நளினியின் மரண தண்டனையை மட்டும் மாற்ற முடிவு செய்ததாகவும், மற்ற குற்றவாளிகளின் கருணை மனுக்களை அரசாங்கம் நிராகரித்ததாகவும் தெரிவித்தார்.

ஆனால் அம்மா ஜெயலலிதா அரசு அனைவரையும் விடுவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டதாகவும், துரதிஷ்டவசமாக ஜெயலலிதா காலமானதால், அம்மாவின் வழி வந்த அதிமுக அமைச்சரவை சபையில் ஒரு மிதமான தீர்மானத்தை நிறைவேற்றி அவர்களை விடுவிக்க முடிவு செய்து, அதற்கான மனு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று எடப்பாடி குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து தமிழக மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் ஏழு குற்றவாளிகளை விடுவிப்பதற்காக எடப்பாடி அரசு முயற்சி எடுத்து வருவதாக கூறியுள்ளார்.

இவ்வாறிருக்க ஒரு செய்தியாளர் முதல்வரிடம், ‘ஏழு குற்றவாளிகளை விடுவிப்பதற்கான நீட் ஒதுக்கீடு உத்தரவின்படி மாநில அரசு செயல்படுமா?’ என கேட்டார்.

இதற்கு எடப்பாடியார், ‘இதுபோன்ற விவகாரங்கள் எல்லாம் கவர்னரின் பார்வையில் உள்ளது. மேலும் தமிழகம் தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க தான் கவர்னர் டெல்லி சென்றிருக்கிறார்.

மேலும் ராஜ்பவனில் இருந்து  ஆளுநர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும், பிரதமர் அலுவலகத்தில் ஜிதேந்திர சிங்கையும், ஆளுநர் துணை தலைவர் வெங்கையா நாயுடுவையும் சந்தித்துள்ளார்.

மேலும் அவர்களிடம் ஆளுநர் தமிழ்நாடு தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதித்து வருகின்றார்’ என்று கூறியுள்ளார்.மேலும் இறுதியாக ‘புரோகித்தின் டெல்லி பயணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

ஏனெனில் உச்சநீதிமன்றத்தின் குற்றவாளியான ஏஜி பேரறிவாளனை விடுவிக்க மாநில அரசாங்கத்தின் பரிந்துரையின் பெயரில்  நிலுவையில் உள்ள மனுவை விசாரிக்கவும், அவர்களைத் தவிர வேறு யாராவது ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்களா என்பதை கண்டுபிடிக்கவும், எம் பி எம் ஏ- வின் இறுதி அறிக்கைக்காகவும் புரோகித் காத்திருக்கின்றார்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார் முதல்வர்.

Rajiv-murder-case

Rajiv-murder-case

இவ்வாறு தமிழகத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சனைக்கு, முதல்வர் முற்றுப்புள்ளி வைக்க நினைப்பதை பார்த்த மக்கள் அவரது அரசால் அதிக அளவு  ஈர்க்கப்பட்டு வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top