fbpx
Connect with us

Cinemapettai

இறக்குமதியான உள்ளாடை.. ஒல்லிபிச்சான் இசையமைப்பாளர் பண்ணும் ஆடம்பர அலப்பறை

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இறக்குமதியான உள்ளாடை.. ஒல்லிபிச்சான் இசையமைப்பாளர் பண்ணும் ஆடம்பர அலப்பறை

தமிழ் சினிமாவில் சுலபமாக வாய்ப்பு கிடைத்தவர்கள் பெரும்பாலும் நட்சத்திர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தான் இருப்பார்கள். அந்த வகையில் சினிமாவுக்குள் நுழைந்தவர் தான் ஒல்லிபிச்சான் இசையமைப்பாளர். ஆரம்ப படத்திலேயே இசையால் இளைஞர்களைக் கட்டிப்போட்டவர்.

அதன்பிறகு சீக்கிர நடிகர் படத்திற்கு இசையமைத்தார். ஆனால் அந்த படத்தை தயாரித்தவர் இசையமைப்பாளரின் சொந்தக்காரர். தொடர்ந்து சொந்தக்காரர்களின் கையூன்றி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

ஆனால் இவரது ஆடம்பர அலப்பறைக்கு அளவே இல்லை என கோலிவுட் வட்டாரம் கிசுகிசுக்கிறது. என்னவென்றால் இவர் போடும் உள்ளாடை கூட வெளிநாட்டு இறக்குமதிதானாம். அதுவும் 4,000 ரூபாய்க்கு வாங்கி மூன்று நாட்களுக்கு தான் உபயோகப்படுத்துவாராம். அப்படி என்றால் மற்ற ஆடைகள், ஷூ, கண்ணாடி இவைகளை கற்பனை நினைத்தே பார்க்க முடியாதாம்.

பணம் இருக்கிறது என்பதற்காக ஒரு முறை உபயோகப்படுத்துவதை மறுமுறை உபயோகப் படுத்த மாட்டேன் என அடம் பிடிக்கிறாராம். கேட்டால் இது துபாய் கலாச்சாரம் என பந்தாவாக சொல்லிக் கொள்கிறார். காலில் போடும் ஷூ கூட பல லட்சம் தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அதுமட்டுமல்லாமல் பிரபல நடிகையுடன் பப்பில் ஆட்டம் போட்ட புகைப்படம் வெளிவந்து இவரை ஒரு உலுக்கு உலுக்கியது. அது குறைவதற்குள் கெட்டவார்த்தையில் பாட்டு பாடி மொத்தமாக சிக்கிக் கொண்டார். ஆனால் அதன் பிறகு எப்படியோ அந்த விஷயத்தை தன் மந்திர இசையால் மறக்கடித்து விட்டார் என்பதுதான் அவருடைய திறமை.

பத்தாததுக்கு இவரை உச்ச நட்சத்திரம் வேறு புகழ்ந்து தள்ளி வருகிறார். சாமி பாட்டை காப்பி அடித்து விட்டு இந்த மாதிரி புகழ்ந்து கொள்வது நல்லதுக்கு இல்லை எனவும் அரசல் புரசலாக பேசி வருகின்றனராம். பிரபல பாடகியுடன் இவர் காட்டிய நெருக்கம் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்கிறது அவரது நெருங்கிய வட்டாரங்கள்.

இருந்தும் வெளியில் நான் ஒரு முரட்டு சிங்கில் என தனக்குதானே முத்திரை குத்திக்கொண்டு சுற்றி வருகிறாராம். இதில் தயாரிப்பாளரின் தலைவலியாகவும் இருக்கிறார் என அவரை கமிட் செய்த அனைத்து தயாரிப்பாளர்களும் கற்பூரம் அடித்து சத்தியம் செய்கின்றனர்.

ஒரு பாட்டு வாங்குவதற்கு இவரிடம் படாதபாடு படவேண்டி இருக்கிறது என தலையில் அடித்துக் கொள்கிறார்களாம். இருந்தும் பெரிய நடிகர்களின் சிபாரிசு இருப்பதால் அடங்கிப் போக வேண்டியிருக்கிறதாம்.

இவர் இசையை காப்பியடிப்பது அப்பட்டமாக தெரிகிறது. இசையை காப்பி அடித்தால் கூட பரவாயில்லை ஆனால் இசையை இவர்தான் கண்டுபிடித்தது போல போடும் சீன்தான் தாங்க முடியவில்லை என்கிற நெருங்கிய வட்டாரங்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top