fbpx
Connect with us

Cinemapettai

பாடல்கள் இல்லாமல் தமிழ் சினிமாவில் வெளியாகி வெற்றி பெற்ற படங்கள் எவை தெரியுமா?

without-songs

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாடல்கள் இல்லாமல் தமிழ் சினிமாவில் வெளியாகி வெற்றி பெற்ற படங்கள் எவை தெரியுமா?

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை காதல், காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் இருக்கும் படங்களைத்தான் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள் என்ற குருட்டு மனப்பான்மையை உடைத்து எறிந்த திரைப்படங்கள் நிறைய உண்டு. அந்த வகையில் பாடல்கள் இல்லாமல் வெளியாகியும் பல படங்கள் வெற்றியை பெற்றுள்ளன.

அந்த நாள்:

அந்த வகை திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வசூலிலும் பல சாதனைகள் படைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சிவாஜி கணேசன் நடிப்பில் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த அந்த நாள் படத்தில் பாடல்கள் கிடையாது. இருந்தும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வெற்றி பெற்றது.

வீடு:

அதன் பிறகு 1988 ஆம் ஆண்டு வீடு என்கிற படம் வெளியானது. எதார்த்தமான திரைக்கதையில் தேவையில்லாமல் பாடல்களை வைத்து ரசிகர்களை சலிப்படைய வைக்கக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு உருவான படம்.

குருதிபுனல்:

1995ஆம் ஆண்டு கமல்ஹாசன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் குருதிப்புனல். புரட்சியாளர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில் பாடல்கள் கிடையாது. மேலும் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்ப்பை பெற்ற திரைப்படம்.

ஹவுஸ்புல்:

பார்த்திபன் என்னும் மகா கலைஞன் 1999ஆம் ஆண்டு உருவான திரைப்படம் ஹவுஸ்புல். இதில் வயதான கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்து இருந்தாலும் விக்ரம் மற்றொரு ஹீரோவாக நடித்திருந்தார். விக்ரமுக்கும் பார்த்திபனுக்கும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்த இந்த திரைப்படத்தில் பாடல்கள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாக்:

2004 ஆம் ஆண்டு மீனா மற்றும் பிரசாந்த் நடிப்பில் திரில்லர் படமாக உருவானது ஷாக். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் தமிழ் சினிமாவையே திருப்பி போட்டது என்று சொல்லலாம். இந்த படத்திலும் ஒரு பாடல் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஷாக் படம்தான் தமிழ் சினிமாவில் நிறைய பேய் படங்கள் தொடர்ந்து எடுக்கக் காரணமாக அமைந்தது.

விசாரணை:

2015 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான திரைப்படம் விசாரணை. பாடல்கள் இல்லாமல் உருவான திரைப்படத்தில் இதுவும் ஒன்று. விமர்சக ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம்.

கைதி:

2019ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் கைதி. தந்தைக்கும் மகளுக்கும் இடையில் உள்ள பாசப் போராட்டத்தை பாடல்கள் இல்லாமல் அதிரடி திரைக்கதையில் உருவாக்கி பெரிய வெற்றியை பெற்றவர் லோகேஷ் கனகராஜ். இந்த படம் வசூலில் 100 கோடியை தொட்டது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top