தீபாவளிக்கு நேரடி OTT ரிலீசாகும் 4 தமிழ் படங்கள்- அந்த படம் இல்லையா என ஏங்கும் ரசிகர்கள்

சினிமா படப்பிடிப்பு தொடங்கினாலும், திரையரங்குகள் மூடப்பட்டு தான் உள்ளது. இதனை உடனடியாக திறப்பதற்கான முயற்சியில் சினிமா துறையினர் உள்ளனர். கொரோனாவின் பாதிப்பினால் 6 மாதங்கள் மூடப்பட்டுள்ள தியேட்டர்கள் வேறு சில மாநிலங்களில் திரந்துள்ளனர். கிட்டதட்ட வருடத்திற்கு 500 படங்களுக்கு மேல் வெளியிடும் தமிழ் திரைப்பட வர்த்தகத்தை முற்றிலும் பாதிக்கப்பட்டு தான் உள்ளது.

பல கோடிகள் புரளும் கோடம்பாக்கம் ஸ்தம்பித்து தான் போயுள்ளது. திரை அரங்குகள் திறக்கும் பட்சத்திலும் 50 % ஆட்களுடன் தான் படங்களை திரையிட முடியும் என்ற சூழலும் உள்ளது. எனினும் தயாரிப்பாளர்களுக்கு ஆபத்தில் உதவுவது ஆன்லைன் பிளேட் பார்ம்கள் தான்.

இதுவரை உறுதியாக OTT யில் ரிலீசாகும் தமிழ் படங்கள் விவரம் பின் வருமாறு…

ott-directors-movies-cinemapettai-1
ott-directors-movies-cinemapettai-1

சூரரை போற்று சூர்யாவின் படம் அமேசான் பிரைம் தளத்திற்கு கைமாறி பல மாதம் ஆகிறது. இந்த அக்டோபரில் ரிலீஸ் ஆகவேண்டியது, எனினும் NOC பிரச்சனை வந்து தள்ளி போனது. இன்று ட்ரைலர் வெளியானது, படத்தை நவம்பர் 12 அமேசான் வெளியிடுகிறது.

ott-directors-movies-cinemapettai-1
suriya-sooraraipottru

மூக்குத்தி அம்மன் காமெடியன் என்ற லிமிட்டை கடந்து ஹீரோ, இயக்குனர் என கலக்கி வருகிறார் ஆர் ஜே பாலாஜி. இப்படத்தை இவருடன் இணைந்து NJ சரவணனும் இயக்குகிறார். அம்மன் வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார். தியேட்டரில் தான் என சத்தியம் செய்த RJபாலாஜி டிஸ்னி ஹாட் ஸ்டார் பளஸுக்கு படத்தை கொடுத்துவிட்டார். தீபாவளியை முன்னிட்டு ஆன் லயனில் கட்டாயம் படம் வெளிவருகிறது. மேலும் விஜய் சூப்பர் / டிவியில் வெளிவரவும் வாய்ப்பு உள்ளதாம்.

ott-directors-movies-cinemapettai-1
nayanthara in mookutthi amman

நாங்க ரொம்ப பிஸி – கன்னட சினிமாவில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த மாயாபஜார் பட தமிழ் ரீமேக். சுந்தர் சி தயாரிக்க பத்ரி இயக்குகிறார். இப்படத்தில் அஸ்வின், ஷாம், பிரசன்னா, யோகி பாபு போன்றோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். குறைந்த பட்ஜெட் படம் நேரடியாக சன் நெக்ஸ்ட் ஆப் மற்றும் சன் டிவியில் இப்படத்தை திரையிடுகின்றனர்.

ott-directors-movies-cinemapettai-1
mayabazaar official tamil remake

அந்தகாரம் – அட்லீ தயரித்துள்ள படம். அர்ஜுன் தாஸ், வினோத் ஆகியோர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ட்ரைலரை பார்க்கும் போது செம்ம மாஸ்டர் பீஸான படம் என தோன்றியது. இப்படம் நெட் பிலிக்ஸ் தலத்தில் வெளியாகிறது.

andhaghaaram

இவை இது வரை உறுதியான லிஸ்ட் மட்டுமே. விஷாலின் சக்ரா,  ஜெயம் ரவியின் பூமி, சந்தானத்தின் டிக்கிலோனா, ரைசா வில்சன் நடித்துள்ள சேஸ் மற்றும் மேலும் சில படங்களும் முனைப்பாக இணைய ரிலீஸ் நோக்கி உழைத்துக்கொண்டு இருக்கிறார்களாம். விரைவில் லிஸ்ட் பெரிதாகும்.