Connect with us
Cinemapettai

Cinemapettai

actors-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ரிலீசாகாமல் தடுமாறும் தமிழ் படங்கள்.. எஸ் ஜே சூர்யா, விக்ரம் எல்லாம் பாவம்பா!

தமிழ் சினிமாவில் உள்ள சில படங்களின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியபின் அந்த படம் குறித்த நேரத்தில் வெளியாகாமல் ரசிகர்களை ஏமாற்றி விடும்.

அந்தவகையில் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களின் படங்களும் பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கிடைக்கிறது.

முன்னணி நடிகர்களுள் ஒருவரான விக்ரம் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான படம் துருவ நட்சத்திரம். பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கி ரிலீஸ் ஆகாமல் தடுமாறுகிறது.

ரசிகர்களின் விருப்பமான இயக்குனர் செல்வராகவன். எஸ் ஜே சூர்யா மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவான நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் படம் பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கி விட்டது.

காஜல் அகர்வால் நடிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவான திரைப்படம் பாரிஸ் பாரிஸ். இந்த படத்தின் டிரெய்லரில் காஜல் அகர்வாலின் அந்த இடத்தை சக நடிகை ஒருவர் அமுக்குவது போன்ற காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து இளம் இயக்குனர்களின் முக்கியமான இயக்குனராக கருதப்படும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி நடிப்பில் உருவான நரகாசுரன் படமும் பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கி தடுமாறுகிறது.

மேலும் சீனு ராமசாமி இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடித்த இடம் பொருள் ஏவல் படம் கடந்த 6 வருடமாக வெளியாகாமல் உள்ளது.

struggle-movies-cinemapettai

struggle-movies-cinemapettai

மேற்கண்ட படங்களில் ரசிகர்கள் எந்த படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை கமெண்ட்டுகளில் பதிவு செய்யலாம்.

Continue Reading
To Top