Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இரண்டாண்டுகளாக பெட்டிக்குள் அடைந்து கிடக்கும் படம். காரணம் இதுதான்!

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் வெளியான மூடர் கூடம் படம் மூலம் கவனம் ஈர்த்தவர் நவீன். இயக்குநர் சிம்பு தேவனிடம் இம்சை அரசன் 23ம் புலிகேசி உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த இவர், மினிமம் பட்ஜெட்டில் எடுத்த மூடர் கூடம் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. படத்தை இயக்கியதுடன் அதில் கதாநாயகனாகவும் நவீன் நடித்திருந்தார். அந்த படத்தின் வசனங்கள் இன்றளவும் ரசிகர்களிடம் பிரபலம். அதுவும் சென்ராயன் கேரக்டர் பேசும் பச்சைத் தமிழன்கிட்ட இங்கிலீஷ்ல பேசக்கூடாதுனு உனக்கு ஏண்டா தெரியல என்கிற வசனம் இளைஞர்களில் ஆதர்ஷமானது.

அந்த படத்தில் ஓவியா உள்ளிட்ட பிரபலங்களும் நடித்திருந்தனர். ஒரு வீட்டுக்குத் திருடப் போகும் கும்பல் படும் பாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது மூடர் கூடம் படம். அந்த படத்தின் வெற்றிக்குப் பின்னர் தனது நண்பர் தனராம் சரவணன் இயக்கத்தில் கொளஞ்சி படத்தைத் தயாரிக்க இருப்பதாக நவீன் அறிவித்தார். இவர் மூடர் கூடம் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். மேலும், நவீனின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார்.

கடந்த 2016-ல் தொடங்கிய ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. சமுத்திரக்கனி, சங்கவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இந்த படம் இரண்டு ஆண்டுகளாக வெளிவராமல் முடங்கிக் கிடக்கிறது. தன் இஷ்டம் போல் வாழ நினைக்கும் 12 வயது சிறுவனுக்கும், பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் என நினைக்கும் அப்பாவுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டமும், இதனால் ஏற்படும் விளைவுகளும்தான் ‘கொளஞ்சி’ படத்தின் கதை. இதில், ராஜாஜி, நேனா சர்வார், கிருபாகரன், நசாத், ரஜின்.எம், பிச்சைகாரன் மூர்த்தி, ருஜீல் கிருஷ்ணா, நாடோடிகள் கோபால், ரேகா சுரேஷ், ஆதிரா ஆகியோரும் நடித்துள்ளனர்.

படம் வெளிவராமல் இருக்க இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. நண்பர்களான நவீன் மற்றும் தனராம் சரவணன் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே படம் வெளிவரவில்லை என்கிறார்கள். நவீனைக் குற்றம்சாட்டும் தனராம் சரவணன், 39 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் படத்தை முடித்துக் கொடுத்தேன். ஆனால், அந்த படத்தை 2.25 கோடிக்கு விலை பேசி, அதில் ஒரு கோடி ரூபாயை நவீன் அட்வான்ஸாக வாங்கிவிட்டார். ஆனால், மீதத்தொகை கிடைக்காததால் படத்தை ரிலீஸ் பண்ணமாட்டேன் என்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் நவீனோ, டெல்லியைச் சேர்ந்த ஒருவரிடம் பணம் வாங்கி தங்கவேல் என்பவர் படத்தை வாங்கினார். ஆனால், ஒரு கோடி ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு இப்போ பணம் இல்லை என்கிறார். மீதப்பணத்தைக் கொடுக்காமலும், படத்தை ரிலீஸ் செய்யாமலும் அவர் காலதாமதம் செய்து வருகிறார். மீதப்பணம் கிடைத்தால்தான் நான் பணம் வாங்கியவர்களுக்குத் திருப்பிக் கொடுக்க முடியும். ஆனால், அவர் தனராமைத் தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். படத்தை எப்படி ரிலீஸ் செய்ய முடியும் என்று எனக்குத் தெரியும் என்று வெடித்திருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top