பேரழகியாக இருந்தும் தமிழில் ஜெயிக்க முடியாத 8 நடிகைகள்.. கடைசி வரைக்கும் போராடும் பூஜா

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவாரஸ்யமான பதிவுகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் காணவிருக்கும் தலைப்பு பேரழகியாக இருந்தபோதும் திரைத் துறையில் முன்னேற இயலாத கதாநாயகிகளை பற்றி. வாருங்கள் அந்த எட்டு பேரை இப்போது காணலாம்.

பூஜா ஹெக்டே: சமீபத்திய திரைப்படமான பீஸ்ட் படத்தில் தளபதி விஜய் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார் பூஜா ஹெக்டே. தெலுங்கில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருபவர் பூஜா. தமிழில் அவர் முதன்முறையாக நடித்த திரைப்படம் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த முகமூடி. ஜீவா நடித்த இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக தமிழுக்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் மிஷ்கின் அவர்கள் இயக்கியிருந்தார். படத்திற்கு கே அவர்கள் இசையமைத்து இருந்தார். பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருவதால் பூஜா ஹெக்டே ராசியான நடிகையாக மாறிவிட்டார் என்று கூற இயலாது

ராஷ்மிகா மந்தனா: தெலுங்கு சினிமாவில் நம்பர்-1 நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. மிகப் பெரும் ரசிகர் பட்டாளம் கொண்டுள்ள இவர் தமிழில் கார்த்தியுடன் சுல்தான் திரைப்படம் மூலமாக அறிமுகமானார். சுல்தான் திரைப்படம் மிகவும் சுமாராக இருந்த காரணத்தால் போதிய வரவேற்பை பெறவில்லை. அதுபோல ராஜா அவர்களுக்கும் ராசியான நடிகை என்ற பெயர் கிடைக்கவில்லை.

ராஷி கண்ணா: நடிகை ராசி கண்ணா தமிழில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் செல்லமாக குல்பி ஐஸ் என்று பெயர் வைத்துள்ளனர். விஜய் சேதுபதியுடன் சங்கத்தலைவன் திரைப் படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனபோதும் அவர் நடித்த எந்த திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெறாத காரணத்தால் இன்று வரை ராஷி கண்ணா ராசியில்லாத கண்ணாவாகவே இருக்கிறார்

அதுல்யா ரவி: அதுல்யா ரவி இளம் நடிகைகளில் மிகவும் அழகானவர் திறமையாக நடிக்கவும் செய்பவர். இவர் நாடோடிகள் 2 உட்பட சில படங்களில் கதாநாயகியாகவும் இரண்டாம் நாயகியாகவும் நடித்துள்ளார். ஆனால் பாவம் என்ன செய்வது இதுவரை இவர் நடித்த எந்த திட்டமும் வெற்றி பெறவில்லை. அதனால் பெரிதாக வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இப்பொழுதும் இன்ஸ்டாகிராமில் பிஸியாக இருப்பவர் அவ்வப்போது பல கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

லட்சுமி ராய்: காதல் கிசுகிசு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராய்லட்சுமி. மங்காத்தா படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து இருந்த காரணத்தால் மிகவும் பிரபலமாக அறியப்பட்டார். பல திரைப்படங்களில் கவர்ச்சி நாயகியாகவும் இரண்டாம் நாயகியாகவும் நடித்துள்ள இவர் மிகவும் அழகான தோற்றம் கொண்டவர். ஆனாலும் இவருக்கு என்று பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஒதனி கதாநாயகியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு திரைப்படமும் அமையவில்லை.

பிரணிதா: பெங்களூரைச் சேர்ந்த மாடல் மற்றும் அழகிய நடிகை பிரணிதா. தமிழில் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் சூர்யாவுடன் இரண்டாம் நாயகியாக மாஸ் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் பிரணிதா. இவருக்கும் ராசி இல்லாத காரணத்தால் பெரிதாக எந்தத் திரைப்படமும் ஓடியதாக நினைவில் இல்லை. தற்போது திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டவர் இன்ஸ்டாகிராமில் தான் கற்பமாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இனியா: மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டவர் இனியா. வாகை சூடவா திரைப்படத்தின் மூலமாக நன்றாக நடிக்கக் கூடிய திறமை பெற்றவர் என்று பெயரெடுத்தவர் இனியா. ஆனால் அந்தப் படத்துக்கு பிறகு அவருக்கு நடிப்பதற்கு வாய்ப்புகள் அவ்வளவா கிடைக்காத காரணத்தால் கவர்ச்சி வேடங்களில் நடித்தார். தொடர்ந்து கதாநாயகியாக நடிக்கும் ஆசையில் பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவரால் தொடர்ந்து முன்னிலை வகிக்க முடியவில்லை.

ஸ்ருதி ஹாசன்: உலகநாயகன் கமல்ஹாசனின் முதல் மகளான ஸ்ருதிஹாசன் கவர்ச்சியான தேகத்தையும் அழகான தோற்றத்தைக் கொண்டவர். தமிழ் இசையமைத்து பாடல் வரிகள் எழுதும் ஆற்றலும் பெற்றவர். பூஜை, புலி போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தபோதும் இந்த திரைப்படங்கள் பெரும் வெற்றியைப் பெறவில்லை. அதன் காரணமாக சுருதிஹாசனுக்கு எந்த ஒரு பெரிய வாய்ப்பும் கிடைக்காமல் போனது. அவ்வபோது இன்ஸ்டாகிராமில் தனது காதலருடன் இருக்கும் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் ஸ்ருதி.