இன்னைக்கு சினிமா பேட்டை சான்ட்விச்ல நாம என்ன பார்க்க போறோம்னா கோலிவுட்டின் செகண்ட் பார்ட் ஃபிவர். ஆமாம்க இப்போ எல்லாரும் ஹாலிவுட் பாணில இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம்னு திரைப்படங்களை தமிழையும் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.

அப்படி எடுத்துக் கொண்டிருக்கும் சில இரண்டாம் பாக படங்களின் கரண்ட் செய்திகளை பாப்போம்.

இருபத்தி மூணாம் புலிகேசி 2: இந்த படத்திற்காக ஒரு பிரம்மாண்ட செட் நம்ம பிக் பாஸ் செட் போடபட்டிருக்க இடத்துக்கு பக்கத்திலேயே பல கோடி மதிப்புள்ள போற்றுகாங்க. இந்த படத்துக்காக கஷ்டப்பட்டு வடிவேலு தன் உடல் எடையை குறைச்சுட்டு இருக்காராம்.

மாரி 2: இந்த படத்தில் காஜல் அகர்வால் அதிக சம்பளம் கேட்பதால் அவுங்களை தூக்கிட்டு வேற ஹீரோயினை வைச்சு படத்தை எடுத்துரலாமானு படக்குழு யோசிக்குதாம். ஏன்னா முதல் பாகத்திலேயே இவர்கள் சேர்வது போல் முடிவுல அழுத்தமா சொல்லிருக்கமாட்டாங்க.

சண்டை கோழி 2: மதுரையில் சில சிக்கல்களால் ஷூட்டிங் எடுக்க முடியாததால் சென்னையிலேயே பத்து ஏக்கர் நிலத்தில் மதுரை போன்ற கடைவீதி செட் அமைத்து ஷூட்டிங் எடுக்குறாராம் நம்ம அஞ்சான் லிங்குசாமி.

கும்கி 2: கும்கி 2 படத்தை தொடர்வதா வேண்டாமா என்று படக்குழு யோசிக்கிறதாம். தயாரிப்பு பிரச்சனை என்று செய்தி வெளியாகியுள்ளது.

விஸ்வரூபம் 2: கமல் தற்போது படப்பிடிப்பு அனைத்திற்கும் தற்காலிக ஓய்வு அறிவித்துவிட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து முழுமையாய் வெளியேறிய பின்னரே சபாஷ் நாயுடு படத்தை தொடர்வதென்றும், அதன் பிறகே விஸ்வரூபம் பற்றி யோசிக்க வேண்டும் என்றும் கமல் முடிவெடுத்துள்ளதாக கமல் தரப்பு வட்டாரங்கள் கிசு கிசுக்கின்றன…

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: தமிழ் சினிமாவில் முதல்முறையாக இரண்டாம் பாகம் வெளியிட்ட திரைப்படம் அதிசய மனிதன்னு நினைக்கிறேன். தவறுன்னா மனிச்சுகோங்க…