Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரே பாட்டில் பிரபலமடைந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படங்கள்..
தமிழ் சினிமாவில் பாடல்களுக்கு என்றும் முக்கியத்துவம் உண்டு. ஒரு திரைப்படமே ஒரு பாடல் மூலம் வெற்றி அடைந்த வரலாறும் உண்டு. அதைப்பற்றி கொஞ்சம் அலசிப் பார்ப்போம்.
முதலில் மிஸ்கின் இயக்கத்தில் நரேன் நடித்த சித்திரம் பேசுதடி. இந்த திரைப்படம் திரையிட்டு இரண்டு நாட்களுக்கு கூட்டமே இல்லை. இந்த திரைப்படத்தை பார்த்த ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிசந்திரன் இந்த திரைப்படத்தை வாங்கி அதில் வரும் ஒரு பாடலை வாழ மீனுக்கும் அயர மீனுக்கும் கல்யாணம் அனைத்து டிவி களிலும் ஒளிபரப்பி அதன் மூலம் வெற்றிகரமாக 100 நாள் ஓட வைத்தார்.
தனுஷ் நடிப்பில் திருடா திருடி படம் மன்மதராசா பாடலுக்காகவே இந்தப் படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. விக்ரம் நடிப்பில் ஜெமினி படம் ஓ போடு பாடலுக்காகவே 100 நாட்கள் ஓடியது.
உனக்காக எல்லாம் உனக்காக படத்தில் ஜூன் போனால் ஜூலை காற்றே படத்திற்காக 100 நாள் ஓடியது. தனுஷின் 3 படம் கொலைவெறி பாட்டுக்காக உலகம் முழுவதும் பிரபலம் ஆனது. ஆனால் அந்த படம் ஓடவில்லை. சென்னை 28 எல்லாம் புதுமுகங்களை வைத்து இயக்கிய வெங்கட்பிரபு ஜல்சா பண்ணுங்கடா ஒரே ஒரு பாடலுக்காக 100 நாட்களை கடந்தது.
மைனா படத்தை எல்லோரும் பார்த்திருப்போம் அந்த படம் வரும்போது பாடல்களின் மூலமாகவே பிரசித்திப் பெற்று 100 நாட்களை கடந்தது. காதலில் விழுந்தேன் படம் நாக்கு முக்கா பாடலுக்காகவே ஓடியது. இன்னும் சில பாடல்கள் உள்ளன அதை இரண்டாவது பதிப்பில் பார்ப்போம்.
