ஹீரோக்களே பொறாமைப்படும் 5 வில்லன்கள்.. தளபதிக்கு இணையாக 3 வில்லன்கள்

தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் இணையான வில்லன் கதாபாத்திரம் அமைவது மிகவும் கடினம். அவ்வாறு ஹீரோவை பொறாமைப்படும் அளவிற்கு சில படங்களில் வில்லன் நடித்துள்ளார்கள். அந்த வகையில் ஹீரோக்களை காட்டிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வில்லன்களை பார்க்கலாம்.

நீல் நிதின் முகேஷ்: ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் கத்தி. இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த விஜய்க்கு இணையான வலுவான கதாபாத்திரத்தில் நீல் நிதின் முகேஷ் நடித்திருந்தார். இவர் ஒரு பாலிவுட் நடிகர். கத்தி படம் ரசிகர்களிடம் இருந்து இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

வித்யூத் ஜம்வால்: ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் துப்பாக்கி. இப்படத்தில் ஸ்லீப்பர் செல் தலைவராக வித்யூத் ஜம்வால் நடித்திருந்தார். துப்பாக்கி படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் அஜித்தின் நடிப்பில் வெளியான பில்லா 2 படத்திலும் நடித்திருந்தார்.

அபிமன்யு சிங்: ஏ எல் விஜய் இயக்கத்தில் விஜய், அமலாபால் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தலைவா. இப்படத்தில் பீமா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் அபிமன்யு சிங் நடித்து இருந்தார். இவருடைய மிரட்டலான நடிப்பில் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

ராகுல் தேவ்: சிவா இயக்கத்தில் அஜித், லட்சுமிமேனன் நடிப்பில் வெளியான திரைப்படம் வேதாளம். இப்படத்தில் ரத்னாபாய் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் ராகுல் தேவ் நடித்து இருந்தார். இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்கள் நடித்துள்ளார். தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் வேதாளம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார்.

சோனு சூட்: தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் சந்திரமுகி படத்தில் ஊமையன் கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் சோனு சூட். இது தவிர அருந்ததி படத்திற்கும் சிறந்த வில்லனுக்குகான பிலிம் ஃபேர் விருது பெற்றார். சிம்பு நடிப்பில் உருவான ஒஸ்தி படத்தில் குத்துச்சண்டை வீரர் டேனியல் கதாபாத்திரத்தில் சோனு நடித்திருந்தார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்