fbpx
Connect with us

இந்திய சார்பில் ஆஸ்கர் நுழைவுக்கு போட்டியிட்ட தமிழ் படங்கள்.. இந்த வாரம் வெளிவந்த படமா?

oscar-2020

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்திய சார்பில் ஆஸ்கர் நுழைவுக்கு போட்டியிட்ட தமிழ் படங்கள்.. இந்த வாரம் வெளிவந்த படமா?

உலக அளவில் பிரபலமான ஆஸ்கர் விருது மிகப் பிரம்மாண்டமான விருதாக கருதப்படுகிறது. சினிமாவில் சாதனை படைத்தவர்கள் மற்றும் மக்களுக்கு சமுதாய ரீதியாக ஒரு கருத்துக்களை சொல்ல வேண்டும் என்றால் அதற்கு முக்கிய கருவியாக சினிமா பயன்படுத்தப்படுகிறது.

அடித்தட்டு மக்கள் வரை ஒரு சமுதாயத்திற்கான கருத்துக்களை தெரிவிப்பதற்கு சினிமா மிகப்பெரிய ஊன்றுகோல் ஆகும். இந்த விருதிற்காக இந்தியா சார்பில் தமிழ்  படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த வடசென்னை படம்,  இரண்டாவதாக விஜய் சேதுபதி பெண் வேடத்தில் நடித்த ஷில்பா என்ற கேரக்டர் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது,  அதுமட்டுமல்லாமல் இயக்குனரின் படைப்பு மிக அற்புதமாக இருந்தது. ஆகையால் சூப்பர் டீலக்ஸ் படம் தேர்வாகியுள்ளது.

மூன்றாவதாக இந்த வாரம் வெளிவந்த ஒத்த செருப்பு பார்த்திபன் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக மக்களிடையே பேசப்பட்டு வருகிறது. ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்து எப்படி இவ்வளவு தத்ரூபமாக கதைகளை எடுக்க முடியும் என்று ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

இந்த மூன்று படங்களும் ஆஸ்கர் நுழைவுக்கு போட்டியிடுவதால் தமிழ் ரசிகர்களிடையே பெரும் சந்தோசம் ஏற்பட்டுள்ளது.  இந்த படங்களில் கடுமையாக உழைத்த நடிகர்-நடிகைகள் அனைவருக்கும் தற்போது வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top