ஒரே வசனத்தால் ஹிட்டான பிரபலங்கள்.. இப்படி பஞ்ச் பேசியே ஜெய்ச்சிட்டாங்க

தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியும், ஒரு சில படங்களின் வசனங்கள் மட்டுமே இன்று வரை ரசிகர்களிடம் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளன. அது எந்தெந்த வசனங்கள்  என்பதை தற்போது பார்ப்போம்.

என்னத்த கண்ணையா: பி வாசு இயக்கத்தில் அவரது மகனான சக்தி நடிப்பில் வெளியான திரைப்படம்  தொட்டால் பூ மலரும்.  இந்த படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. ஆனால் இப்படத்தில் இடம் பெற்ற காமெடி காட்சிகள் இன்று வரை ரசிகர்களிடம் பேசப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக வடிவேலுவுடன் என்னத்த கண்ணையா  “வரும் ஆனா வராது” எனக் கூறும் வசனம் இன்றுவரை ரசிகர்களிடம் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.

ennatha kannaiya
ennatha kannaiya

மைனா: பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான திரைப்படம் மைனா. இப்படத்தில் பஸ்ஸில் ஒரு காட்சியில் கும்புடு குருசாமியின் தீபாவளி நல்வாழ்த்துக்கள் எனக் கூறும் வசனம் மிகவும் பிரபலமடைந்தது.

முதல் மரியாதை: சிவாஜி நடிப்பில் வெளியாகி காலத்திற்கும் பேசக்கூடிய படமாகயிருப்பது முதல் மரியாதை. இப்படத்தில் செங்கோடன் எனும் கதாபாத்திரத்தில் ஏ.கே. வீராசாமி அவர்கள் நடித்திருப்பார். அதிலும் குறிப்பாக இப்படத்தில் “எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி” என கூறும் வசனம்  ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. 

ரமணா: விஜயகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் ரமணா. இப்படத்தில் முகேஷ் ரிஷி  விஜயகாந்தை குறிப்பிடும் வகையில் “யாருயா அவரு எனக்கே பாக்கணும் போல இருக்கே” என கூறுவார். இந்த வசனம் படம் வெளிவந்த காலத்திலிருந்து இன்று வரை பிரபலமாக உள்ளது.

mukesh rishi
mukesh rishi

வருத்தப்படாத வாலிபர் சங்கம்: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இப்படத்தில் சிவகார்த்திகேயனிடம் ஒரு பாட்டி “ஒரு கோடி செலவு பண்ணி கல்யாணம் நின்னு போச்சு” எனக் கூறும் வசனம் மிகவும் பிரபலமடைந்தது.

பருத்திவீரன் குட்டி சாக்கு: பருத்திவீரன் படத்தில் கார்த்தி மற்றும் சரவணன் கூடயே சுற்றும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் குட்டி சாக்கு. இந்த படத்தில் இவர் பேசும் வசனங்கள் அனைத்தும் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது.

kutty sakku
kutty sakku

அதாவது ‘உங்க கூட சுத்துனா எப்படி காசு இருக்கும்’, ‘ஏ கருவாச்சி உன்னத்தான்’, ‘அவன் கிட்ட காசு இருக்கு அம்புட்டு தான் சொல்லுவேன்’ எனக் கூறும் வசனம் எல்லாம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.

Also Read: தமிழ் சினிமாவில் முதன்முதலில் புது டெக்னாலஜி பயன்படுத்திய படங்கள்.. 7வது படம்தான் பிரம்மாண்டம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்