படத்தில் தேவையில்லாத சீன்கள் வைத்த இயக்குனர்கள்.. தெண்ட செலவுதான் மிச்சம்

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் தேவையில்லாத காட்சிகளை இயக்குனர்கள் வைத்திருப்பார்கள். அந்த சீன்களால் படத்திற்கு எந்த ஒரு பலனும் இருக்காது. அதேபோல் படத்தில் ஏதாவது ஒரு கதாபாத்திரம் வைக்க வேண்டும் என்பதற்காக ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி கதாநாயகிகளை நடிக்க வைப்பார்கள்.

ஆனால் படத்திற்கும் அந்த கதாநாயகியின் கதாபாத்திரத்திற்கும் சம்பந்தமே இருக்காது. அப்படி செயல்பட்ட இயக்குனர்களின் படங்களை பற்றி பார்ப்போம்.

சந்திரமுகி. தமிழ் சினிமாவில் 300 நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படம் தான் சந்திரமுகி. இப்படத்தில் அனைத்து கதாபாத்திரமும் படத்திற்கு பக்கபலமாக அமைந்தது. ஆனால் ஆறடிக்கு பாம்பு ஒன்றை படத்தில் காட்டியிருப்பார்கள். ஆனால் அப்படத்தில் பாம்பு எதற்காக என்ன காரணத்திற்காக இருக்கிறது என்பதை சொல்லாமல் படத்தில் பாம்பு கடைசியாக சென்றுவிடும். இது படத்தில் பெரிய இம்பக்ட் ஏற்படுத்தவில்லை.

snake-chandramukhi
snake-chandramukhi

சச்சின். சச்சின் படம் முழுக்க முழுக்க ஊட்டியை மையமாக வைத்து எடுத்திருப்பார்கள். ஆனால் படத்தில் ஒரு காட்சியில் ஊட்டியின் பனி மூட்டத்தை காட்டுவதற்காக செயற்கையாக பனி புகையை ஏற்படுத்துவார்கள்.

vijay
vijay

ஏற்கனவே ஊட்டி பனி மூட்டமாக தான் இருக்கும் ஆனால் தேவையில்லாமல் சேர்க்கை பனி மூட்டத்தை ஏற்படுத்தி படத்தில் செலவு செய்திருப்பார்கள்.

ராஜபாட்டை. ராஜபாட்டை படத்தில் லட்டு லட்டு ரெண்டு லட்டு எனும் பாடல் இடம் பெற்றிருக்கும் ஆனால் படத்திற்கும் பாடலுக்கும் சம்பந்தமாகவே இருக்காது. படம் வெளிவந்த பிறகு படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் சுசீந்திரன் தேவையில்லாத செலவுகளை படத்திற்கு செய்துள்ளார் என குற்றம் சாட்டினார்.

vikram
vikram

தர்பார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தர்பார். இப்படத்தில் நயன்தாராவை எதற்காக படத்தில் வைத்திருந்தார்கள் என்பது பலருக்கும் தெரியாது. ஆனால் படத்திற்காக நயன்தாராவிற்கு  6 கோடி சம்பளம் கொடுத்து உள்ளனர். ஏதோ படத்தில் ஹீரோயின் வேண்டும் என்பதற்காக மட்டுமே நயன்தாராவை படத்தில் நடிக்க வைத்திருப்பார்கள்.

nayanthara
nayanthara

இப்படி பல படங்களில் நிறைய காட்சிகள் உள்ளது. ஆனால் அதில் சிலவற்றை மட்டும் பார்த்தோம். விரைவில் மற்ற படங்களையும் பார்க்கலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்