நடிகை நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.4 கோடி சம்பளம் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘ஐயா’ படத்தில் அறிமுகமாகி, தற்போது இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், அறம், வேலைக்காரன் ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ள நிலையில், தெலுங்கில் பாலகிருஷ்ணா போன்ற மூத்த நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கவும் சம்மதிக்கிறார்.
நடிகை அனுஷ்கா சம்பள விஷயத்தில் நயன்தாராவை முந்திவிட்டார். அவர் தற்போது ரூ.5 கோடி சம்பளம் கேட்கிறார்.  அருந்ததி, ருத்ரமாதேவி, பாகுபலி படங்கள் அவருக்கு பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.
நடிகை சமந்தா ஒரு படத்துக்கு ரூ.2 கோடி சம்பளம் வாங்குகிறார். காஜல் அகர்வால் ரூ.2 கோடி சம்பளம் வாங்குகிறார். தெலுங்கில் இவருக்கு மகதீரா படம் திருப்பு முனையாக அமைந்தது. தமிழில் விஜய்யுடன் மெர்சல், அஜித்குமாருடன் விவேகம்  ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
நடிகை திரிஷா 15 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில்  நடிப்பதோடு, ஒரு படத்துக்கு ரூ.1½ கோடி வாங்குகிறார்.
சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களில் நடிக்கிறார். இவர் ஒரு படத்துக்கு ரூ.1 கோடி வாங்குகிறார்.  ஹன்சிகா, தமன்னா, ரகுல்பிரீத்சிங் ஆகியோரும் ரூ.1 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது.