fbpx
Connect with us

Cinemapettai

அமெரிக்காவில் தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம் நன்றி தெரிவித்த வைரமுத்து.

Vairamuthu

World | உலகம்

அமெரிக்காவில் தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம் நன்றி தெரிவித்த வைரமுத்து.

அமெரிக்காவில் தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம்.

அமெரிக்காவில் தமிழர்கள் அதிகம் வாழ்ந்த வருகின்றனர். அந்தவகையில் கரோலினா மாநிலத்தில் அதிக அளவில் தமிழ் கலாச்சாரம் கொண்ட தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அதையடுத்து ஜனவரி மாதம் தை தமிழ் மொழி மற்றும் தமிழ் பண்பாட்டு மாதமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதனை ஏற்றுக்கொண்ட அம்மாநில கவர்னர் ராய் கூப்பர் தமிழ் சங்கத்தின் கோரிக்கையை ஏற்றார்.இதையடுத்து ஜனவரி மாதத்தில் தமிழ் மொழி மற்றும் தமிழ் பண்பாட்டு மாதமாக கரோலினா அரசு அறிவித்துள்ளது

இதனால் தமிழர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ராய் கூப்பர் வெளியிட்டுள்ள அறிக்கையைஉலகத்தில் உள்ள பழமையான மொழிகளில் முதல் மொழி தமிழ் மொழி எனவும். வடக்கு கரோலினா பகுதியில் தமிழ்மொழி மக்கள் அதிகம் வசித்து வருவதாகவும் மற்றும் அவர்களது கலாச்சாரத்தை பாதுகாத்து வருவதாகவும் கூறியுள்ளார்

அதுமட்டுமின்றி வரலாற்று வளர்ச்சிக்கு இது பெரும் உறுதுணையாக இருக்கும் எனவும் தமிழர்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதற்காக கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் மொழிக்கு கிடைத்த சிறப்பு என பதிவிட்டுள்ளார்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top