fbpx
Connect with us

2019-ல் நம்மை மிரள வைத்த திரில்லர் படங்கள்.. பெயரை கேட்டாலே அதிருது

Tamil Cinema News | சினிமா செய்திகள்

2019-ல் நம்மை மிரள வைத்த திரில்லர் படங்கள்.. பெயரை கேட்டாலே அதிருது

வித்தியாசமான திரைப்படங்களுக்கும், ஹாலிவுட் படங்களுக்கும் ஏன் கமர்சியல் படங்களுக்கும் தனித்தனியான ரசிகர்கள் உள்ளன. அதேபோல்தான் திகில் படங்களுக்கும். அதிலும் காமெடி கலந்த திகில் படங்களை குடும்ப ரசிகர்களே அதிகம் விரும்புகின்றனர்.

அந்த வகையில் 2019ஆம் ஆண்டு வெளியான திகில் படங்களில் சில படங்கள் மட்டுமே ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. திகில் படங்கள் பெரும்பாலும் காதலர்களால் ரசிக்கப்படும். அப்போதுதான் தியேட்டரில் கார்னர் சீட் புக் பண்ணி விட்டு, சரி விடுங்க அவ்வளவு டீடெய்லா போக வேண்டாம்.

அதுவும் வித்தியாசமான திகில் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு எப்போதுமே இருக்கும். இதோ கடந்த வருடம் வெளியான திகில் படங்களின் லிஸ்ட்

இருட்டு

சுந்தர் சி யின் வித்தியாசமான நடிப்பில் வெளியாகி மற்ற திகில் படங்களில் இருந்து வேறுபடுத்தி காட்டியதால் இந்த படம் வெற்றியை பெற்றது.

தேவி 2

பிரபுதேவா நடிப்பில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. ஒரு சில படங்கள் முதல் பாகத்தில் நிறுத்திக்கொள்வது நல்லது. அதை உணர்த்தியது இந்த படம்தான்.

அருவம்

சித்தார்த் நடிப்பில் கமர்ஷியல் அம்சங்களுடன் திகில் படமாக உருவாகி இருந்த இந்த படம், பேய் படமாக இல்லாமல் இருந்திருந்தால் ஓரளவு பேசப்பட்டிருக்கும்.

தில்லுக்கு துட்டு 2

சந்தானம் ஹீரோவாக நடித்த பிறகு ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்ட படம் என்றால் அது தில்லுக்குதுட்டு மற்றும் தில்லுக்குதுட்டு 2 மட்டும்தான்.

காஞ்சனா 3

ஒரே கதையை வைத்துக்கொண்டு 100 கோடி வசூல் கொடுக்க முடியும் என நிரூபித்துக் காட்டியவர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா வரலாற்றிலேயே அதிகம் கேலி கிண்டலுக்கு உள்ளான படமும் இதுதான்.

பெட்ரமாக்ஸ்

தமன்னா கதையின் நாயகியாக நகைச்சுவை கலந்த திகில் படமாக நடித்த பெட்ரோமாக்ஸ் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் முதலுக்கு மோசம் இல்லை என்ற லிஸ்டில் சேர்ந்தது.

ஐரா

நயன்தாரா நடிக்கும் திகில் படம் எல்லாம் பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையில் கல்லை தூக்கிப் போட்டது இந்தப் படம். கதையில் பெரிய அளவு சுவாரஸ்யம் இல்லாததால் தோல்வியை தழுவியது.

பொட்டு

பரத் நமீதா ஆகியோர் நடிப்பில் உருவாகி நீண்ட காலமாக கிடப்பில் கிடந்து ஒரு வழியாக வெளியான திரைப்படம் தான் பொட்டு. ரசிகர்கள் இனிமேல் இந்த மாதிரி படங்களில் நடிக்காதே என பரத்துக்கு ஒரு கொட்டு வைத்தது இந்த படத்தில்தான்.

நீயா 2

வழக்கம்போல் ஜெய் ஹீரோயின்களை தடவுவதையே வேலையாக வைத்துள்ளார் என ரசிகர்கள் தலையில் அடித்துக்கொண்டு தியேட்டரைவிட்டு முதல் காட்சியிலேயே ஓடிய திரைப்படம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top