Tamil Cinema News | சினிமா செய்திகள்
தெலுங்கு சினிமாவில் நம் தமிழ் நடிகர்களின் மார்க்கெட் மற்றும் ஹிட் நிலவரம் இதுதான்
இந்திய சினிமாவிலேயே அதிகமாக வர்த்தகம் நடக்கும் இடம் தெலுங்கு சினிமாவில் தான். சினிமாவை தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள், அதன் காரணமாகவே பாகுபலி-2 இன்று இந்தியாவே வியந்து பார்க்கும்படி வெற்றி கிடைத்துள்ளது.
இதனாலே பல மாநிலத்து நடிகர்களும் தற்போது தெலுங்கு மார்க்கெட்டை குறி வைக்கின்றனர், தெலுங்கை பொறுத்த வரை தமிழ் நடிகர்களில் சூர்யா, ரஜினி, கமல், கார்த்தி, விஷால், தனுஷிற்கு மட்டுமே நல்ல மார்க்கெட் உள்ளது. ஆனால், கடைசி ஒரு சில ஆண்டுகளாகவே எந்த தமிழ் படமும் பிச்சைக்காரனை தவிர்த்து வரவேற்பு அங்கு இல்லை. இந்நிலையில் உங்கள் பேவரட் நடிகர்கள் தெலுங்கில் கொடுத்த ஹிட் நிலவரங்களை பார்ப்போம்
ரஜினி
ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கபாலி தெலுங்கில் ரூ 30 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தாலும், படத்தின் அதிக வியாபாரம் தோல்வியை தான் கொடுத்தது, ரஜினிக்கு கடைசியாக எந்திரனே தெலுங்கில் சூப்பர் ஹிட்டாகிய படம்.
கமல்
கமல்ஹாசனின் விஸ்வரூபம் தமிழில் சொன்ன தேதியில் வெளிவரவில்லை, இதனால் பலரும் ஆந்திராவிற்கு படையெடுத்து போய் பார்த்தனர், அதன் காரணமாகவே படம் செம்ம ஹிட் அடித்தது.
விஜய்
விஜய் நடித்த துப்பாக்கிக்கு தான் தெலுங்கில் செம்ம வரவேற்பு கிடைத்தது, அதை தொடர்ந்து தெறி பெரிய அளவிற்கு போகும் என்று நினைத்தார்கள், ஆனால், சுமாரான வெற்றியை தான் அங்கு பெற்றது.
அஜித்
அஜித்திற்கு மங்காத்தா தான் தெலுங்கில் செம்ம ஹிட், இதன் பிறகு ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால் ஆகிய படங்கள் சுமாரான வெற்றி தான்.
சூர்யா
சூர்யாவிற்கு தமிழ் சினிமாவை விட தெலுங்கில் செம்ம வரவேற்பு உள்ளது, இவரின் 24 படம் ரூ 25 கோடியை தாண்டி அங்கு வசூல் செய்தது. ஆனால், பெரிதும் எதிர்ப்பார்த்த சிங்கம்-3 அங்கும் தோல்வி தான்.
விக்ரம்
விக்ரமின் அந்நியன் படம் தான் அவருக்கு தெலுங்கில் செம்ம மார்க்கெட்டை உருவாக்கியது, அதை தொடர்ந்து ஐ, தெய்வத்திருமகள், இருமுகன் வரை வெற்றி தான்.
தனுஷ்
தனுஷின் வேலையில்லா பட்டதாரி தெலுங்கில் வரலாறு காணாத ஹிட், ஏனெனில் இன்றைய ட்ரெண்ட் இளைஞர்கள் அனைவருக்கும் பொருந்தக்கூடிய கதை, ஆனால், அதை தொடர்ந்து எந்த படமும் அவருக்கு பெரிதாக போகவில்லை.
விஜய் ஆண்டனி
ஒரே ஒரு படம் ஓஹோ என்று வாழ்க்கை என்ற வசனம் விஜய் ஆண்டனிக்கு தான் பொருந்தும், பிச்சைக்காரன் ரூ 1 கோடிக்கு தெலுங்கில் விற்க, ரூ 30 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.
கார்த்தி
சூர்யாவிற்கு அடுத்து கார்த்திக்கும் அங்கு நல்ல மார்க்கெட் உள்ளது, அதனாலேயே அவர் நேரடி தெலுங்குப்படத்தில் கூட நடித்தார், தோழா படம் அனைத்து ஏரியக்களிலும் செம்ம ஹிட் அடித்தது.
சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் படங்கள் தமிழ் தாண்டி பெரிதும் வரவேற்பு இல்லாமல் தான் இருந்தது, ஆனால், ரெமோ படம் தெலுங்கில் அவருக்கு நல்ல மார்க்கெட்டை உருவாக்கியுள்ளது.
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதியின் பீட்சா செம்ம ஹிட் அடித்தது, அதனாலேயே அவரின் படங்களுக்கு ஓரளவிற்கு அங்கு வரவேற்பு இருந்தாலும் பீட்சா தான் ஆல் டைம் ஹிட்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
