fbpx
Connect with us

Cinemapettai

யூரோ கணக்கில் ஹீரோக்கள்! சம்பள விஷயத்தில் புது டெக்னிக் கையாளும் நடிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

யூரோ கணக்கில் ஹீரோக்கள்! சம்பள விஷயத்தில் புது டெக்னிக் கையாளும் நடிகர்கள்

பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு விவகாரத்திற்கு பின் கருப்புப்பணம் ஒழியும் என்று நினைத்தால் அது வேற மாதிரி சென்று கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவை பொருத்தவரை எப்பவுமே சம்பளம் வாங்குகிறவரும் சரி, கொடுக்கிறவரும் சரி பாதிக்கு பாதி என்ற கொள்கையைதான் கடைபிடித்து வந்தார்கள்.

அதிலும் சில ஹீரோக்கள் 30 சதவீதத்தை மட்டுமே கணக்கில் காட்டி வந்தார்கள். மீதி பணத்தை கருப்பு பணமாக வாங்கி, கருப்பாகவே வைத்திருந்தார்கள். அது மாதிரி பதுக்கல் பணத்திற்காகத்தான் ஆப்பு வைக்கறேன் என்று சொன்னார் மோடி.

அதிகமா பணத்தை வாங்கி இம்சை படுவதை விட இனிமேல் ஒரு கொள்கையை கடைபிடிப்போம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் நடிகர்கள். அண்மைக்காலமாக இவர்களுக்கு சம்பளம் கொடுக்கப் போகிற தயாரிப்பாளர்களுக்கு பெரிய அதிர்ச்சியும் தலைவலியும் சேர்ந்திருக்கிறது.

30 சதவீத பணத்தை இந்தியன் ரூபாயா கொடுங்க. பாக்கி பணத்தை 70 சதவீதத்தை யூரோவா மாத்திக் கொடுங்க என்கிறார்களாம். ஏன்? அமெரிக்க டாலரா வாங்கிகலாமே. அங்குதான் சூழ்ச்சி உள்ளது.

அமெரிக்க டாலரை பொருத்தவரை அதிபராக இருக்கும் ட்ரம்ப் எந்த நேரத்துல என்ன பண்ணுவாரு சொல்ல முடியாது. ஆனால் யூரோ மதிப்புன்னா 12 நாட்டு அதிபர்கள் ஒண்ணு சேர்ந்து கையெழுத்துப் போட்டால்தான் செல்லாதுன்னு சொல்ல முடியும். அதனால் நமக்கு யுரோதான் சரி என முடிவெடுத்து உள்ளார்களாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top