கோடிகளை மட்டுமே குறி வைக்கும் ஹீரோக்கள்.. 100 கோடி படத்திற்கு ரஜினி வாங்கிய அதிர்ச்சிகரமான சம்பளம்

திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்கள் ஒரு ஹிட் படத்தை கொடுத்து விட்டால் உடனே தங்களின் சம்பளத்தை கோடிக்கணக்கில் ஏற்றி விடுகிறார்கள். அப்படி அவர்கள் கேட்கும் சம்பளத்தை கொடுக்க தமிழ் தயாரிப்பாளர்களால் முடிவதில்லை. இதனால் அவர்கள் படங்களை தயாரிக்க தயங்கி வருகின்றனர்.

அதனால்தான் கார்ப்பரேட் கம்பெனிகள் திரையுலகில் வெகு சுலபமாக நுழைந்து விட்டது என்ற ஒரு குற்றச்சாட்டும் நிலவி வருகிறது. இதைப்பற்றி தியேட்டர் உரிமையாளரும், விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்ரமணியம் தன்னுடைய வெளிப்படையான கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நிலைமை மிகவும் நலிவுற்று இருக்கிறது. இன்றைய முன்னணி ஹீரோக்களை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்த முன்னணி தயாரிப்பு நிறுவனங்களே தற்போது அவர்களை வைத்து படம் எடுக்க தயங்கி வருகிறது.

இதற்குக் காரணம் நடிகர்களின் சம்பளம் தான். உதாரணமாக ஒரு நடிகர் ஒரே ஒரு ஹிட் படத்தை கொடுத்து விட்டு தன்னுடைய சம்பளத்தை 8 கோடியில் இருந்து 30 கோடி வரை ஏற்றி விட்டார். இப்படிப்பட்ட நிலையில் எப்படி ஒரு தயாரிப்பாளரால் அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க முடியும்.

அதனால்தான் பல நடிகர்களும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு படம் நடித்து கொடுக்கின்றனர். அவர்களால் மட்டும்தான் 200 கோடி வரை செலவு செய்து படத்தை தயாரிக்க முடியும். கடந்த பத்து வருடத்தில் எந்த ஒரு தயாரிப்பாளரும் முன்னணி நடிகரை வைத்து படமெடுத்து சம்பாதிக்கவில்லை.

இதுதான் தற்போது இருக்கும் தயாரிப்பாளர்களின் நிலைமை. இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த சிவாஜி படத்தில் நடிக்கும் பொழுது வெறும் ஆயிரம் ரூபாயை மட்டுமே பெற்றுக் கொண்டு நடித்தார்.

படம் முடிந்து வியாபாரம் ஆனதும் எனக்கான சம்பளத்தை நீங்கள் கொடுத்தால் போதும் என்று அவர் ஏவிஎம் சரவணனிடம் பெருந்தன்மையாக கூறினார். அதன் பிறகு படம் நல்ல வியாபாரம் ஆனதும் சரவணன் ரஜினிக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை விட அதிகமாகவே கொடுத்தார். இதை ஏன் இன்றைய நடிகர்கள் செய்ய தயங்குகின்றனர்.

ஒரு காலத்தில் தங்களை தூக்கிவிட்ட தயாரிப்பாளர்களுக்கு நீங்கள் ஒன்றிரண்டு படங்களாவது நடித்து கொடுங்கள். ஏனென்றால் தயாரிப்பாளர்கள் இல்லாமல் தமிழ் சினிமா கிடையாது. அவர்கள் வாழ்ந்தால் தான் தமிழ் சினிமாவும் வாழும் என்று தன்னுடைய கருத்தை ஆழமாக பதிவு செய்திருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்