சிங்கம் 3 படத்தை இணையத்தில் நேரடியாக வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் பற்றி ஞானவேல் ராஜா திட்டியதும் அதற்கு ட்விட்டரில் தமிழ் ராக்கர்ஸ் பதிலடி கொடுத்ததும் அனைவரும் அறிவர்.

ke-gnanavel-raja-tamilrockersஅப்போதிலிருந்து பற்றிக்கொண்ட இந்த விஷயம் தயாரிப்பாளர்களிடம் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் இணையத்தில் புதிய படங்களை பதிவேற்றுவோரை கண்டறிய ஒரு தனி தொழில் நுட்பக் குழுவை அமைத்திருந்தார்.

தற்போது அக்குழுவின் மூலம் கபாலி, விவேகம் படங்களை தமிழ் கன் இணையத்தில் பதிவேற்றிய கவரி சங்கர் என்பவரை அவரது ஐபி அட்ரஸ் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கவுரி சங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

விசாரணையில் அவர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தமிழ் கன் இணையத்தின் அட்மின் என்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவை திருட்டு விசிடி மற்றும் இணையம் மூலம் அழிக்க நினைக்கும் ஒவ்வொருவர் மீதும் இதே நடவடிக்கை பாயும் என்று விஷால் தெரிவித்துள்ளார்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: பல நாள் அட்மின் ஒருநாள் அகப்படுவான்