பாகிஸ்தானை சேர்ந்த நடிகை வீணா மாலிக் அண்மையில் தனது கணவர் ஆசாத் பஷீர் கான் என்பவரை விவாகரத்து செய்தார். இந்நிலையில், வீணா மாலிக், அவரது கணவர் இருவரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அந்நிகழ்ச்சியில், நான் வீணாவிடம் தினமும் மன்னிப்பு கேட்கிறேன் என்று ஆசாத் கூற, உடனே வீணா, ஆசாத் செய்த இரண்டு விஷயங்களை என்னால் மன்னிக்கவே முடியாது.

ஆசாத் என்னை அடித்து துன்புறுத்தியது மட்டுமில்லாமல் மன ரீதியாக கொடுமைப்படுத்தி அவமானப்படுத்தினார். அதனால் அவரை மன்னிக்கவே முடியாது என கூறியிருந்தார்.

ஆனால் ஆசாத் நிகழ்ச்சியிலேயே அனைவரின் முன்னிலையில் மன்னிப்பு கேட்க, வீணாவோ, இனி என்னை ஒழுங்காக பார்த்துக் கொள்வேன் என ஆசாத்தை எழுத்துப்பூர்வமாக அளிக்குமாறு கூறுங்கள் நான் மன்னிக்கிறேன் என்றார்.

அதன்படி நிகழ்ச்சியில் வீணாவை அன்பாக பார்த்துக் கொள்வதாகவும், தன்னுடன் மீண்டும் சேர்ந்து வாழுமாறும் எழுத்துப்பூர்வமாக ஆசாத் அளிக்க ஒப்புக் கொண்டார். அதன் பிறகு அவரை மன்னித்துவிட்டதாக கூறினார் வீணா.