Lekha Washington - Tamil Gossips

தமிழில் ஜெயம்கொண்டான், கல்யாண சமையல் சாதம் போன்ற சில படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்துக்கு வந்தவர் லேகா வாஷிங்டன். இவர் அண்மையில் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது, தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் காரில் என்னை அழைத்துச் சென்றார். உன்னை என் படத்தில் நடிக்க வைக்கிறேன் பதிலுக்கு எனக்கு என்ன கிடைக்கும் என்று கேட்டார்.

அந்த இயக்குனர் கூறியது புரியாதது போன்று நடித்தேன். ஆனால் அவர் மீண்டும் மீண்டும் கேட்டார். உங்களுடன் படுக்கையை பகிர்வேன் என்று மட்டும் நினைக்க வேண்டாம் என்று பளிச்சென்று சொல்லிவிட்டேன்.

படுக்கைக்கு வர மாட்டேன் என்று நான் கூறியது அந்த இயக்குனருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் என்னை சமரசம் செய்யப் பார்த்தார். நான் முடியாது என்று பிடிவாதமாக இருந்துவிட்டேன்.

சில நாட்கள் கழித்து அதே இயக்குனர் வேறொரு முன்னணி நடிகையுடன் அதே படத்திற்காக வெளிநாட்டுக்கு படப்பிடிப்புக்கு சென்றார். ஆனால் அதிக டோஸ் வயாக்ரா பயன்படுத்தியதால் அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக செய்தி வெளிவந்தது என்று கூறியுள்ளார்.

Lekha Washington