மார்க்கெட் படுத்துவிட்டதால் கவர்ச்சிக் கடலில் குதிப்பது என்று ரிப்பன் நடிகை முடிவு செய்துள்ளாராம்.

அண்டை மாநிலத்தில் இருந்து வந்த ரிப்பன் நடிகை பெரிய இடத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கையில் தற்போது ஒரேயரொரு படம் மட்டுமே உள்ளது.

மார்க்கெட் சரிந்து படுத்துவிட்டது. இதை பார்த்த நடிகை ரூம் போட்டு யோசித்து கவர்ச்சிக் கடலில் தொப்புக்கடின்னு குதிப்பது என்று முடிவு செய்துள்ளாராம்.

இதையடுத்து கவர்ச்சியான உடைகள் அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு அனுப்பி வைத்து வருகிறாராம்.

கவர்ச்சிக்கு தாவினால் மார்க்கெட் பிக்கப்பாகிவிடும் என்ற நம்பிக்கையில் அவர் இந்த வேலையில் இறங்கியுள்ளார்.