தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற கேங்ஸ்டர் படங்கள்.. 10 படத்துலயும் இந்த 1 படம் வேற லெவல்!

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் ஒன்றும் தெரியாதது போல் நடிக்கும் நடிகர்கள் ஒரு சில படம் வெற்றியடைந்து விட்டால் எப்படியாவது மாஸ் படமான கேங்ஸ்டர் படத்தில் நடித்து விட வேண்டும் என நினைப்பார்கள். அப்படி ஆரம்ப காலத்தில் ஒண்ணும் தெரியாத குழந்தை போல் நடித்துவிட்டு அதன் பிறகு கேன்ஸ்டர் அவதாரம் எடுத்த நடிகர்களைப் பற்றி பார்ப்போம்.

தமிழ் சினிமாவை பொருத்தவரை வெற்றி பெறுவதற்கு முன்புதான் காதல் மற்றும் காமெடி படங்களில் மட்டும்தான் நடிகர்கள் தங்களது கவனத்தை செலுத்துவார். ஆனால் ஏதாவது ஒரு இயக்குனர் அந்த நடிகரை வைத்து மாஸ் படம் எடுத்து விட்டால். அந்த ஆசை அவங்களை விட்டு விடாது. அதன் பிறகு தொடர்ந்து மாஸ் படங்களில் தான் நடிக்க கவனம் செலுத்துவார்கள்.

ரஜினிகாந்த்

rajinikanth0-cinemapettai
rajinikanth0-cinemapettai

நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பகாலத்தில் வில்லனாக பல படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு கேங்ஸ்டர் படமாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான தளபதி திரைப்படம் தான். இந்த படத்திற்கு பிறகு தான் ரஜினிகாந்த் மாஸ் நடிகர் ஆனார். அதன் பிறகு பாட்ஷா படம் இவரது வாழ்க்கையில் கேங்ஸ்டார் படமாக இடம் பிடித்தது.

கார்த்திக்

karthik

நடிகர் கார்த்திக் தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் காதல் நடிகராக வலம் வந்தார். அதன் பிறகு ஒரு சில சண்டை காட்சிகள் மட்டும் நடித்துக்கொண்டிருந்தார். பின்பு அமரன் திரைப்படத்தின் மூலம் தான் கேங்ஸ்டர் நடிகராக ரசிகர்களிடம் பிரபலமானவர். அதிலும் கார்த்திக் பாடிய “வெத்தல போட்ட சோக்குல நான் கப்புன்னு குத்துன மூக்குல” எனும் பாடல் தற்போதுவரை பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு கேங்ஸ்டர் நடிகராக மாறினார் கார்த்திக்.

அஜித் குமார்

Ajith-Kumar

அஜித் ஆரம்ப காலத்தில் மற்ற நடிகர்களை போல எதார்த்தமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அமர்க்களம் திரைப்படம் தான் இவருக்கு கேங்ஸ்டர் நடிகராக மாற்றியது. அதன்பிறகு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தீனா படத்தின் மூலம் மாஸ் நடிகராக அவதாரம் எடுத்தார் . இந்த படத்தின் மூலம் அஜித்திற்கு தல என்ற பெயரும் கிடைத்தது.

சூர்யா

surya
surya

சூர்யா நடிப்பில் ஆரம்பகாலத்தில் அனைத்து படங்களும் காதல் படங்களாகவே வெளியாகின ஆனால் ஆறு படத்தின் பிறகுதான் இவர் தமிழ் சினிமாவில் கேங்ஸ்டர் நடிகராக பிரபலமானார்.

அதன் பிறகு விக்ரம் நடித்த ஜெமினி, சிம்பு நடித்த தொட்டி ஜெயா, ஆர்யா மற்றும் பரத் பட்டியல் தனுஷ் நடித்த புதுப்பேட்டை படம் மற்றும் சசிகுமார் நடிப்பில் வெளியான சுப்ரமணியபுரம் ஆகிய படங்கள்  தமிழ் சினிமாவில் கேங்க்ஸ்டர் படங்களாக வெற்றி பெற்றன. இந்த படங்களில் உங்களுக்கு பிடித்தது எந்த படம் என்பதை கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்கள்

Next Story

- Advertisement -