Tamil Cinema News | சினிமா செய்திகள்
தமிழர்கள் சூறையாடிய 5 திரைப்படங்கள்.. அதுவும் இந்த 1 திரைப்படம் ரொம்ப மோசம்

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதில் ஒரு சில படங்கள் மற்றும் தமிழர்களுக்கு கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் கதையம்சமும், கதாபாத்திரமும் உருவாக்கியிருந்தனர். அப்படி தமிழர்கள் கோபமடைந்து சுக்குநூறாக்கிய படங்களை பற்றி பார்ப்போம்.
மல்லி
தமிழர்களுக்கு அதிகம் கோபப்படுத்தி திரைப்படத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது மல்லி திரைப்படம். இப்படம் ராஜீவ் கொலை வழக்கை மையப்படுத்தி கதை அம்சத்தை உருவாக்கியிருந்தனர். படம் வெளிவந்த காலத்தில் இப்படத்தின் மீதான எதிர்ப்பு வலுவாக இருந்ததால் படத்தை வெளியிட பல தரப்பினரும் முன்வர வில்லை.

malli
டேம் 999
சோஹன் ராய் டேம் 999 என்ற படத்தை இயக்கி இருந்தார். இதன் மையக்கரு அணை உடைந்தால் பல உயிர்கள் பறிபோகும் என்பதுதான். அப்போது கேரளாவிற்கும் தமிழகத்திற்கும் இடையே அணை பிரச்சினை நிலவி வந்தது. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என கேரளாவும், உயர்த்த வேண்டும் என தமிழகம் போராடி வந்தது. அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால் கேரளா அழிவது போல் கதை அம்சத்தை இயக்குனர் வடிவமைத்திருந்தார். இதனால் அப்போது ஆட்சியிலிருந்த அதிமுகவும் எதிர்க்கட்சியாக இருந்த திமுகவும் இப்படத்திற்கு எதிர்ப்பை தெரிவித்தனர்.

dam999
இனம்
இலங்கை இனப்படுகொலை பற்றி சந்தோஷ் சிவனின் இனம் எனும் பெயரில் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் வெளிவந்த ஒரே வாரத்தில் திரையரங்கில் இருந்து தூக்கப்பட்டது. அதற்கு காரணம் தேவையில்லாத சில காட்சிகள் படத்தில் இடம் பெற்றிருந்தன. ஆனால் இப்படம் விரைவில் OTT தளத்தில் வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

inam
வரனே ஆவ்ஷ்யமுண்டு
துல்கர் சல்மான் தயாரித்து நடித்த திரைப்படம் வரனே ஆவ்ஷ்யமுண்டு. இப்படத்தில் ஓய்வு பெற்ற ராணுவ கேப்டன் ஆக வரும் சுரேஷ்கோபி தனது நாய்க்கு பிரபாகரன் என பெயர் வைத்திருப்பார். இதற்காக தமிழர்கள் படக்குழுவினர் மீது கடும் விமர்சனங்களை வைத்தனர். அதற்கு காரணம் விடுதலை சிறுத்தைகளின் தலைவரான பிரபாகரன் பெயர் வைக்கப்பட்டது தான். பின்பு இறுதியாக துல்கர் சல்மான் அதற்கு வருத்தம் தெரிவித்தார்.

varane avashyamund
தீ ஃபேமிலி மேன்
சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் எனும் வெப்சீரிஸ் இலங்கை தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் கதாபாத்திரமாக இருப்பதாக கடும் எதிர்ப்பை பலரும் தெரிவித்தனர். இருப்பினும் வெப்சீரிஸ் OTT தளத்தில் வெளியாகி உள்ளது. தற்போது வரை இதனை நிறுத்த வேண்டும் என பலரும் பல்வேறு கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.

the family man
