fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அப்படி…அந்த RJ என்னதான் கேள்வி கேட்டார்..? நிகழ்ச்சியின் இடையிலேயே கிளம்பிய பிரபல நடிகை

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அப்படி…அந்த RJ என்னதான் கேள்வி கேட்டார்..? நிகழ்ச்சியின் இடையிலேயே கிளம்பிய பிரபல நடிகை

பிரபல பண்பலை வானொலி பேட்டியில் கேட்கப்பட்ட கேள்வியால் கோபம் அடைந்த நடிகை கவுதமி பேட்டியை பாதியிலேயே முடித்துக் கொண்டு கிளம்பினார்.

நடிகை கவுதமி பிரபல பண்பலை வானொலி நிலையத்திற்கு சென்றார். அவரிடம் பேட்டி எடுத்தவர் நீங்கள் ஏன் உலக நாயகன் கமல் ஹாஸனை ஏன் பிரிந்தீர்கள்? என்று கேட்டார்.

இந்த கேள்வியால் சிறிது கோபம் அடைந்தார் கவுதமி. இந்நிலையில் பேட்டி எடுத்த ஆர்ஜே தனது அடுத்த கேள்வியை கேட்டதும் கவுதம் கோபத்தில் கொந்தளித்து பேட்டியை பாதியிலேயே முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.

அந்த ஆர்.ஜே. கேட்ட கேள்வி இது தான், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது விளம்பரம் தேடத் தானே?

ஜெயலலிதாவின் மரணம் குறித்து பலருக்கும் பல சந்தேகங்கள் இருக்கும்போது அது குறித்து விளக்கம் கேட்டு மோடிக்கு கடிதம் எழுதியவர் கவுதமி. ஆனால் அவர் கடிதத்திற்கு பதில் இன்னும் கிடைத்தது போன்று தெரியவில்லை.

கமல் ஹாஸனை திருமணம் செய்யாமலேயே அவருடன் 13 ஆண்டுகளாக லிவ் இன் முறைப்படி வாழ்ந்தவர் கவுதமி. கமலை பிரிவதாக அவர் தான் முதலில் அறிவித்தார்.

கமலை பிரிவதாக அறிவித்தாலும் அவர் அதற்கான காரணத்தை கூறவில்லை. தனது மகள் சுப்புலட்சுமிக்கு நல்ல தாயாக இருக்க விரும்புவதாக மட்டும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top